பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

தமிழர் வரலாறு

தனிமிகப் பழம்பெரும் சீன எழுத்தாளரின் படைப்பின் ஒரு பகுதி, அண்மைக்கால வரலாற்று ஆய்வு அளித்த நனிமிகு வியத்தகுமுடிவு” எனப், பால் பெல்லியோட் என்பாரை அறிமுகம் செய்துள்ளார்.

பின்னர், 44, 45 பக்கங்களில், “கி.மு. இராண்டாம் நூற்றாண்டில் காஞ்சியும் சீனாவும்” என்ற தலைப்புள்ள இரண்டாம் அதிகாரத்தில், முதல் பத்தியில், கி. பி. முதலாம் துாற்றாண்டில் வாழ்ந்திருந்த, “பான் கெள” (pan kow) என்ற சீன எழுத்தாளர். தம்முடைய “இட்சின் ஹன் செள” (Tsein han chow) என்ற நூலில், “தொன்கின்” (Tonkin). வளைகுடாவின் உள் நாடாம், “மேல் அன்னம்” (Upper Annam) என இப்போது வழங்கப்படும் “ஜே-நன்” (Je-Nan) நுழைவாயிலிலிருந்து புறப்பட்டு, படகுவழியாக, ஐந்து திங்கள் பயணம் செய்து, “தொன்-யுவான்” (Ton-Ywan) நாட்டை அடைந்தோம். பின்னர்க் கடல் வழி நான்கு திங்கள் பயணத்திற்குப் பின்னர், “யி-வெள-மொ” (Yi-Low-Mo) என்ற நாட்டை அனடந்தோம். மேலும் இருபது நாட்களுக்கு மேற்பட்ட கடல் பயணம் மேற்கொண்ட பின்னர், “சென்-லி” (Chen-Li) என்ற நாட்டை அடைந்தோம், அங்கிருந்து, நீங்கள், பத்துநாட்களுக்கு மேற்பட்ட நிலவழிப் பயணம் மேற்கொண்டால், “பவு-கன்- தொள-லொ” (Fow-Kan-Tow-Law) என்ற நாட்டை அடைவீர்கள். அந்நாட்டிலிருந்து படகு வழியாக இரு திங்களுக்குமேல் பயணம் செய்தால், “ஹெளங்-டெக்” (Howang teche) என்ற நாட்டை அடைவீர்கள். அந்நாட்டுப் பழக்கவழக்கங்கள், “தச்செள-யை” (Tchow-yai) நாட்டுமக்கள் பழக்கவழக்கங்கள் போலவே உள்ளன. இந்நாடு பரந்து அகன்று, மக்கள் பெருக்கத்தால் மிகுந்து, அரும்பொருட்கள் பலவற்றை ஆக்குவதாக விளங்குகிறது. கி. மு. 140-86 காலத்தவரான, பேரரசர் “வெள” -(Wow) காலம் முதல், அரும்பொருட்களைச் சீனாவிற்கு அனுப்பி வைக்கிறது” என எழுதிவைத்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.