பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழர் வரலாறு

உள்ள மாகிஸ்மதீ அல்லது மாந்தாத நகரைத், தென்கோடி நகரமாகக் கொண்ட, அவந்தி நாட்டின் ஊடே அமைக்கப்பட்டிருந்ததாம் என அறுதியாக முடிவு செய்கிறார்.4

திருவாளர் பந்தர்கார் அவர்கள். ஆரியர்கள், தென்னிந்தியாவுக்குச் சென்றிருக்கக்கூடிய பிறிதொரு வழித்தடமாம் கடல் வழியையும் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள், சிந்து வெளியிலிருந்து, கலங்களில் அல்லது கட்டுமரங்களில் கச்சத்திற்குச் சென்று, அங்கிருந்து கடற்கரை வழியாகச் செளராட்டிரம் அல்லது கத்தியவாருக்குச் சென்று, கத்தியவாரிலிருந்து பகருகச்சசம் அல்லது இன்றைய ப்ரோச்சுக்கும், பகரு கச்சசத்திலிருந்து பம்பாய் மாநிலம், தானா மாவட்டம், சுப்பாரகம் அல்லது கொபாராவுக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறது.”

மேற்கூறிய வகையால், விந்தியமலையும், தண்டகாரண்யக் காடும், வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கு மிடையில் கடக்கலாகாத் தடைகளாக இருந்தன என்ற கூற்று உண்மையற்றதாகிறது. வேத மந்திரங்களோடு இணைத்துள்ள சில உண்மைகளைக் கருத்தில் கொண்டால், வேத காலத் தொடக்கத்திலிருந்தே, ஆரிய வர்த்தத்திற்கும், தக்கண பாகத்திற்கும் இடையில், பரந்த அளவிலான வாணிகப் போக்குவரத்து இருந்து வந்திருக்க வேண்டும். விந்தியத்திற்குத் தெற்கே உள்ள இந்தியாவைத் தனிமைப்படுத்தும், திருவாளர் சிமித் அவர்களின் கூற்று அடிப்படையற்றது என்ற முடிவினை நாம் கொள்ளலாம்.


வேதங்களில் தென்னிந்தியா

சமஸ்கிருத இலக்கியங்களில், தென்னிந்தியா பற்றிய மிகப் பழைய குறிப்பு, இருக் வேதத்தைச் சேர்ந்த, (X61:8) “சரத்பதா ந தக்கணா பராவர்ன் நதாநுமெ ப்ர்ஸன்யொ ஜக்ர்பரெ” எனவரும் பொருள் விளங்காப் பாட்டில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படும் ஒன்று: திருவாளர் சாயனா அவர்கள், “அய்த்ரேய பிராமணாவில்” வரும் ஒரு புராணக் கதையைப் பின்பற்றி, “தக்கிணா“ என்ற சொல்லுக்கு ஆடு