பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைக்காலத்தில்-வடஇந்தியத் தொடர்பு 35 மாடு போலும் கால்நடைகளாகக் கொடுக்கப்படும் ஒரு வகை வரி எனும் பொருள்கொண்டுள்ளார். ஆனால் ஐரோப்பிய அறிஞர்கள், அச்சொல்லைத் தெற்கு’ என மொழி பெயர்த்துள்ளனர். திருவாளர்கள் மேக்டொனெல், கெய்த் இருவரும் * தக்கணாபதா' (தென்னாடு நோக்கி வைத்த கால்), நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகளை (பராவர்ன்) நாடு கடத்தும் இடத்தைக் குறிக்கும் என்கின்றனர்." அத் தொடருக்குத் திருவாளர்கள் மேக்டொன்னெல் அவர் களும் கெய்த் அவர்களும் அளிக்கும் பொருள் விளக்கம் சரியானதே. ஆரிய நாகரீகம் விந்தியத்துக்கு அப்பால் தெற்கில் நுழையாத, மிகப் பழைய வேத காலத்தில், தக்கண பாதம், நாடு கடத்தப்பட்டவர்களின் இடமாகக் கருதப்பட்டது என்பது, விஸ்வாமித்திரர், மற்றும் அவர் மகன்களின் கதையால் உறுதி செய்யப்படுகிறது. இக் கதை அய்த்ரேய பிராமணத்தில் கூறப்பட்டுளது. ஆனால், அதனாலேயே அக்கதையில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள், அய்த்ரேய பிராமனா காலத்தைச் சேர்ந்தனவாகக் கொள்வது கூடாது. அது, ஏறத்தாழ கி. மு. 2000 இல் வாழ்ந்திருந்த, காயத்திரி மந்திர ரிஷியாகிய, முதல் விசுவாமித்திரர் காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கதை. இந்த விசுவாமித்திரர், அரிச்சந்திரன் மகன், ரோகிதாசுவின் வேண்டு கோளின்படி, நடைபெற்ற நரபலி வேள்வியில், பலியாகக் கொல்லப்பட இருந்த, தன் உடன் பிறந்தார் மகனாகிய சுனக்சேபனைப், பலியிடுவதிலிருந்து காப்பாற்றியபோது, கொலையிலிருந்து விடுபட்ட அவனைத் தன் மகனாகத் தத்து எடுத்துக்கொண்டு, அவனுக்குத் தேவராதன் எனப் பெயரும் சூட்டினார். விஸ்வாமித்திரருக்குப் பிறந்த ஐம்பது மகன்களும், கனக்சேடன் தங்கள் குடும்பத்தின் தவைவனாக உயர்த்தப் பட்டதை எதிர்த்தனர்; சின அடக்கம் உடைமைக்கு எக்காலத்தும் பாராட்டப்படாதவராகிய விசுவாமித்திரர் 'அவன்தான் வஹ் ப்ரஜா பக்ஸ்ஸிட் எனக் கூறிச் செய்தார். இத் தொடர்க்குத் திரு. கெய்த் அவர்களால், கால்வழியினர் நில மகளின் கடைகோடிப் பகுதிக