பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழர் வரலாறு

காலத்துத், திடுமெனத் தோன்றிவிட்ட வாணிக வளர்ச்சியா காது என்பதை, நாம் எளிதில் நம்பலாம், மற்றப் பண்டங்கள் :

அதர்வ வேதத்தில் அடிக்கடி குறிப்பிடப்படும் நறுமணத் தைலங்கள், மருந்துகளில், தென்னிந்தியப் பெயர் கொண்ட பண்டங்களும், தக்கிணாபதத்திலிருந்து சென்றனவே யாதல் வேண்டும். இவையல்லாமல் லாகஷா'1' என்ற மரவகைப் பெயரும், 'மயூரா' என்ற பறவையினப் பெயரும், தமிழ் மொழியிலிருந்து பெறப்பட்டனவாகவே நான் ஐயுறுகின்றேன். இவை போலும் சொல்லியல் ஊகங்கள் இல்லாமல், வடஇந்திய ஆரியர்களுக்கும், தென்னிந்திய தஸ்யூக்களுக்கும் இடையில், இருடிகள் காலத்தில், மிகப்பெரிய வாணிகத் தொடர்புகள் இருந்தன என்பதற்கும் எண்ணற்ற வேறு அகச்சான்றுகளும் உள்ளன. கையுடைய ஒரு விலங்கு என, யானை வேதங்களில், அடிக்கடி குறிப்பிடப்படுகிறது: விந்திய மலைப்பகுதி அல்லது அதற்கு அப்பாலும் தெற்கில் உள்ள பகுதிகளிலிருந்து, அவை பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.' எனக்குத் தெரிந்தவரை, தந்தத்தில் செதுக்கு வேலை பற்றிய குறிப்பு, வேதங்களில் இல்லை. ஆனால், அலங்காரங்களில் ஒன்றாகப் புதியதாகச் செலுத்திய கம்பத்தின் மீது உடையணியா இரு மகளிரின் மெல்லிய உருவங்கள் என்பது போலும் சித்திரச்செதுக்கு வேலைப்பாடு குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த உருவங்கள், மரம் அல்லது பொன், அல்லது தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டனவாதல் வேணடும். வடஇந்தியர்கள் தந்தச் செதுக்குக் கலையில் பயிற்சி பெறாதிருந்தால், அரசர்கள் கொண்டிருந்த, எண்ணற்ற யானைகளிலிருந்து பெறும் அவ்வளவு தந்தங் களையும் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதற்கு விடைகாண இயலாது போகும். தந்தச்செதுக்கு வேலை வேதகாலத்துக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக பழங்கற். காலத்தில் இருந்தது, நாகரீக வளர்ச்சி உறறதும், அது, அழிந்து போயிருக்க இயலாது. பிற்காலத்தில், சிலவ நாக - ஜாதகக் கதைகளில் (72), தந்தத்தை, வேறுபட்ட வடிவங்