பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்பிடப்பட்டிருப்பதால், அவன், அந்நூலாசிரியர்களின் சமகாலத்தவன் என்பது பொருளாகிவிடாது. உண்மையில், விதர்ப்ப நாட்டு. பீமா அல்லது பீமரதன் என்பவன், இராமனுக்கு ஏறத்தாழ பதினைந்து தலைமுறைகளுக்கும், மகாபாரத காலத்துப் பிரஹத் பாலனுக்கு நாற்பது தலை முறைகளுக்கும் முற்பட்டவனான, அயோத்யா நாட்டு அயுதாயுவின் சம காலத்தவன். அய்த்ரேயா மற்றும் பிற பிராமணாக்கள், மகாபாரதக் காலத்து வேதவியாசர், சமிதாக்களைத் தொகுத்ததன் மூலம், வேத மந்திரங்களுக்கு முடிவுகட்டிவிட்ட காலத்திற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டனவாம். ஆக, பீமா அ ய் த் ரே ய பிராமணாக்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு, முன்பே வாழ்ந் தவன்; அவனுக்குப் பத்துத் தலைமுறைகளுக்கு முன்னரே, விந்தியம் கடக்கப்பட்டு, விதர்ப்ப நாடு தோற்றுவிக்கப்பட்டு விட்டது, ஜயாமகன் என்ற யாதவ குல் இளவரசன் ஒருவன், அவனுடைய நாடுகடத்தப்பட்டு, நாகர்களும், பிற தஸ்யூக்களும் குடிவாழும், நர்மதாவின் மலைகள் செறிந்த மேட்டுப் பகுதியில், தன் எதிர்கால வாழ்வைத் தெற்கு நோக்கித் தேடலாயினன் , அவன், அங்கு, கொள்ளையடித்து உண்ணும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். அவன், அல்லது அவள் மகன், விதர்ப்பா என்பவன், தெற்கு நோக்கிச் சென்று, தபதி ஆற்றங்கரையில், தனக்கென ஒரு நாட்டைத் தோற்றுவித்துக் கொண்டான். அந்நாடும் அதன் தலைநகரும் அவன் பெயரால் விதர்ப்பம் என அழைக்கப் பட்டது.35 அவனுக்குப்பிறகு பல ஆண்டு கழித்தே, பீமரதன் ஆட்சி மேற்கொண்டான்.

விந்தியப் பகுதியில், பண்டைக் காலத்தில் விதர்ப்பம் மட்டுமல்லாமல், வேறுபல ஆரிய நாடுகளும் நிறுவப்பட்டிருந் தன் விதர்ப்பம், அல்லாமல், தக்கண கோசலம், சேதி, தஸாரணம், நிடதம் ஆகியவைகள், விந்திய மலையடிவாரத்தில், வேதகாலத்து இடைப்பகுதியில் இருந்த ஆரியக் குடியிருப்புகளாம். சேதி நாட்டு ராஜா, கசு என்பான் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளான்' சேதி, தஸாரணம்,