பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழர் வரலாறு

பொறுப்புக்கு அனுப்பப்பட்ட அரசு குடும்பத்து அலுவலர் செப்னி (Sebni) என்பான். வாவெட் (Wawat) உத்தெக் (Uthek) பகுதிகளுக்கு எவ்வாறு இறங்கிச் சென்று இரி (iri) என்ற அரசு ஊழியனை மேலும் இரு ஊழியர்களோடு நறுமணப் புகைதரும் மெழுக்கு உடைகள் (பெரும்பாலும் பருத்தி உடைகள்) யானைத்தந்தம் விலங்கின் தோல் ஆகிய் பொருள்களைச் சுமந்துவர அனுப்பி வைத்தான் என்பதைக் குறித்து வைத்துள்ளான். நனிமிகப் பழமை வாய்ந்த அந்நாட்களில் உலகில் தென்னிந்தியா ஒன்றில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன.

மேலே குறிப்பிட்ட தந்தம் ஆப்பிரிக்கத் தந்தமாம். ஆனால் அது இந்தியத் தந்தமாகவும் இருக்கக்கூடும். இந்தியத் தந்தம், வேறு எந் நாட்டுத் தந்தத்தினும் மிகச் சிறந்து விளங்கினமையால் தொடக்க காலத்திலிருந்தே அது மிக அதிக மாக வேண்டப்பட்டு வந்துளது. மேலும் யான்ைகளைக் கொல்வது கொடுவிலங்குகள் நிறைந்த, பருமரங்களால் அடர்ந்த கொடுநோய்களின் நிலைக்களமாம் ஆப்பிரிக்கக் காடுகளினும் இந்தியக் காடுகளில் எளிது. எகிப்திய அரசர்களுக்கு ஆப்பிரிக்கத் தந்தங்களைக் கொடுத்துவந்த அபிசீனிய சோமர்லிலாந்து யானை வேட்டையாளர், வாய்ச்சி, கோடரி, வாள் முதலாம் படைக்கலங்களையும் பயன்படுத்தினர். அந் நாட்களில் இரும்புத் தொழிற்கருவிகளை ஏற்றுமதி செய்யக் கூடிய நாடு இந்தியா ஒன்றுதான்; அவற்றிற்குப் பதிலாக இந்தியா ஆப்பிரிக்காவிலிருந்து இந்நாட்டில் வேதகாலத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு நறுமணப் புகை தரும் பொருள்கள். இனிய மணம் கமழும் மரப்பிசின்களை இறக்கு மதி செய்து கொண்டது. அடுத்துவந்த காலங்களில் இந்தியா விலிருந்து இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான எழுத்தாவணம் இருக்கிறது. அவ்வாணிகம் அந்நாட்களிலும் முந்திய தொடக்க நாட்களிலும் இருந்து வந்தது என உறுதியாக நம்பலாம்.

பண்டமாற்றிற்காகத் தொலை நாடுகளுக்குச் சென்று வந்த மக்களை வேதமந்திரங்கள்குறிப்பிடுகின்றன.