பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் 71 ஆனால், கி. மு. ஏழாம் நூற்றாண்டில், நிலைமை அவ்வாறு இல்லை, வால்மீகி இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டதான இராமகாதை, நாடோடிப்பாடல்களாக, அன்று வழக்கில் இருந்தது என்பது பெளத்த ஜாதகக் கதைகளில், 461வது காதையான தசரத ஜாதகக் கதையால் உறுதியாகிறது.3.

    அக் கட்டுக் கதை வருமாறு : பனாரஸ் அரசன் தசரதனுக்குப் பதினாறாயிரம் மனைவியர் உள்ளனர் : அவனுடைய முத்த ராணிக்கு, இராம பண்டிதன். அதாவது அறிவாளி ராமன், லக்கண குமாரன், சீதாதேவி ஆகியோர் பிறந்தனர். இந்த ராணி இறந்ததும், தசரதன், மற்றொருத்தியை மூத்த ராணியாகக் கொண்டான். அவளுக்குப் பரதன் பிறந்தான். இந்த ராணி, தன் மகனுக்கு அரசைக் கொடுக்குமாறு அவனைத் தொல்லைப்படுத்தினாள். தசரதன் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டு, நாட்டில் இருந்தால் அவர்கள் அழிவிற்கு மூத்தராணி சூழ்ச்சி செய்துவிடுவாள் ஆதலின், இராமனையும், லக்கணனையும், சீதாதேவியையும், காட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு நிமித்திகன் கூறிய வாறு, தான் இறந்துவிடும் பன்னிரண்டாம் ஆண்டு இறுதியில் திரும்பி வந்து அரசுரிமையைக் கேட்குமாறு பணித்தான். அவர்கள் இமயத்திற்குச் சென்று ஒரு பர்ணக சாலையில் வாழ்ந்து வந்தனர். ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு துயரத் தால் அரசன் இறந்துவிட்டான், பரதன், இராமன் தங்கி யிருந்த ஆசிரமத்தை நாடி அடைந்து திரும்பிவந்து நாடாளு மாறு இராமனை வேண்டிக்கொண்டான். தந்தை ஆணையிட்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழிவதற்கு முன்னர் வர முடியாது என மறுத்துவிட்டுப் பரதனிடம் தன்னுடைய பாதுகைகளைக் கொடுத்து, அவை மூன்றாண்டு காலம் நாட்டை ஆளும் எனக் கூறி அனுப்பினான். பின்னர் பரதன், லக்கணன், சீதாதேவி ஆகிய மூவரும் பாதுகை களோடு தலைநகர் திரும்பினர். மூன்று ஆண்டுகள் கழிந்ததும், இராமன் பனார்ஸூக்குச் சென்று சீதா, தன் மனைவியாக, அவளோடு அரசனாக முடிசூட்டிக்கொண்டு பதினாறாயிரம்