பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம்: XXI இளந்திரையன்

அவன் தலைநகர்க்குப் போகும் வழியில் :

பட்டினப்பாலையில், கரிகாலன் புகழ்பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பத்துப்பாட்டு வரிசையில் பிறிதொரு பாட்டாகிய பெரும்பாணாற்றுப் படையில், தொண்டைமான் இளந்திரையன் எனும் பெயருடைய காஞ்சிபுரக் காவலன் ஒருவனையும் பாடியுள்ளார். பாட்டின் தலைப்பு, 'புலவர்களுக்குப் பெரிய வழிகாட்டி' என்பதாம்.

அடிக்குறிப்பு :

(மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு: பாணர்களில், ஒரு சில நரம்புகளைக் கொண்ட சிறிய யாழில் வல்லவர், பற்பல நரம்புகளைக் கொண்ட பெரிய யாழில் வல்லவர் என இருவகையினர் உள்ளனர். அவர்களுள் பெரிய பாணனுக்குக் கூறிய வழிகாட்டு உரை என்பதே இதன் பொருளாம்.) இது, தன் புகழ்பாடும் இரவலர்க்கு வாரிவழங்கும் பெரியவள்ளலாம் இளந்திரையன் பால், பரிசில் பெறச் செல்வீர்களாக எனப் புலவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. பட்டினப் பாலையில் உள்ளதுபோலவே, இப்பாட்டிலும், புலவர், இப்புரவலன் ஆட்சிக் கீழ் உள்ள நாட்டின் பல்வேறு இயற்கை நிலப் பிரிவுகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கை குறித்த விரிவான, நனிமிகு வியத்தகு விளக்கங்களைக் கொடுத்துள்ளார். பாட்டைப் படிப்போரை, இளந்திரையனுக்கு உரிய பற்பல மாவட்டங்களூடே, அழைத்துச் சென்ற பின்னர், புலவர், காஞ்சிக்கு வெகு தொலைவில் இல்லாத பார்ப்பனக் குடியிருப்பு ஒன்றைக் காட்டுகிறார். மனையின் முற்றத்தில் போடப்பட்டிருக்கும் பந்தரின் சிறிய கால்களில், வளமான பசுங்கன்றுகள் கட்டப்பட்டிருக்கும். வீடுகள், ஆவின்