பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழர் வரலாறு

முதல் கி. பி. 900 வரை, அதைத் தலைநகராகக் கொண்டு. ஆண்டவர்கள், தங்கள், தமிழ்க் குடிமக்களாம் தொண்டை யரோடு, பழைய பல்லவர்களினும் நெருக்கமாகக் கலந்து விட்டனர் உண்மையில், முழுக்க முழுக்க, தமிழர்களாகவே ஆகிவிட்டனர். அவர்கள், தங்களைக் தொண்டையர் குல அரசன் எனும் ஒருபொருளே தருவதான, “தொண்டைமான்” (சுந்தரமூர்த் தி நாயனார் வடதிரு முல்லை வாயில் பதிகம் 10, ‘தொண்டையர்கோன்’ (திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி : 8 , 10 : 1) :தொண்டை மன்னவன்’ (திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி : 5 : 8 : 9 : 1) என்றெல்லாம் பெயர் சூட்டிப் பாராட்டும் புலவர் களைப் பேணும் புரவலர்களும் ஆயினர். நாடும், தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம்’ (துண்டக விஸ்யம் ‘துண்டிர விஸ்யம்’ எனச் சமஸ்கிருத மாக்கப்பட்டது) என அழைக்கப்படவும் ஆயிற்று. ஆனால், இவை அனைத்தும் எட்டாம் நாற்றாண்டில் நடைபெற்றன: இந்நிலையிலும், இன்றைய எழுத்தாளர் சிலர், தொண்டையர் என்ற சொல், பல்லவ என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு. அல்லது. இதன் மொழிபெயர்ப்பு அது, எனக் கூறி வாதிடு கின்றனர். பல்லவ என்பது, இளம்தண்டு, சிறுகம்பு அல்லது இளம் தளிர் எனும் பொருள் உடையதாக, தொண்டை என்பது, ஒருவகைக் கொடி எனும்பொருளே உடையதாகலின், அவ்விரு சொற்களும், ஒன்றின் பெயர்ப்பு ஒன்று ஆதல் அறவே இயலாத ஒன்று. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னர், பல்லவ அரசர்கள், தமிழில், ‘போத்தரையர்’ என அழைக்கப்பட்டனர். போத்து என்பது இளம் கொம்பு எனும் பொருள் உடையது ஆதலின், போத்தரையர் என்ற சொல், ‘பல்லவராஜா என்பதன் மொழிபெயர்ப்பாதல் கூடும்: ஆகவே, ஒரு தமிழ்ப் பழங்குடியினர் பெயராகிய தொண்டையர் என்ற சொல்லை. வட இந்தியாவிலிருந்து வந்துகுடியேறிய, ஆரிய மயமாகிவிட்ட, ஓர் அரச குலத்தவர் பெயராகிய பல்லவர் என்ற சொல்லிலிருந்து கொள்வதும் மாறாக, இச்சொல்லை, அச்சொல்லிலிருந்து கொள்வதும்