பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன் 109

ஆகிய அனைத்து முடிவுகளும், வாதங்களின் முன் நிலைத்து நிற்பன ஆகா.

இளந்திரையன், ஒரு தமிழர் தலைவன் ஆதலின், அவன், தமிழ்ப் புலவர்களைப் பேணிப் புரந்தான். அவனே, ஒரு தமிழ்ப் புலவனும் ஆவன். அவனுடைய பாடல் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுளது. அது, ஏனைய குடிமக்கள் பாக்களிலும், சிறந்த செய்யுள் நயம் வாய்ந்தது என்பதற்காக அல்லாமல், காவல பாவலன் பாடிய பாட்டினுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகுக என்பதால் ஈண்டு மொழி பெயர்க்கப் பட்டுளது. அது இது ; ‘'உருளையும் பாரும் நன்கு காக்கப் பெற்று உலகின்கண் ஒட விடப்படும் நாடுகாவலாகிய நல்ல வண்டி, அதனைச் செலுத்துவோன், நாடாளும் மாண்பு நிறையப் பெற்றவனாயின் ஊறுபாடு இல்லாமல், இனிதே நன்கு ஒடும் அவன், அதனை நன்கு செலுத்த அறியானாயின், அது, நாள்தோறும், பகையாகிய பெரும் சேற்றில் சிக்குண்டு மிகப்பெரிய துன்பத்தைத் தந்துவிடும்’

                  ‘'கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும் 
                    காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
                    ஊறு இன்றாகி, ஆறு இனிது படுமே :
                    உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும் 
                    பகைக்கூழ் அல்லற் பட்டு
                    மிகைப் பஃல் தீ நோய் தலைத்தலைத் தருமே’,
                                                      - புறம் : 18

அரசியல் வானில், இவ்வாறு சிறக்கச் சிறகடித்துப் பாடி இப்பாட்டை அடுத்து, இளந்திரையன், நற்றிணையில் இட பெற்றிருக்கும், நெய்தல் திணை சார்ந்த பாடல்கள் இரண்டும் முல்லைத் திணை சார்ந்த பாடல் ஒன்றுமாக, மூன். பாடல்களைப் பாடியுள்ளான். அவற்றுள் முதலாவது : வருமாறு : ‘ஒருத்தி, காதல் நோய் நிலைகுலையப் பண்ணுதலால், உளம் கலங்கி, உடல்வலியிழந்து போகும்போது