பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 தமிழர் வரலாறு

அன்போடு வந்து, அருகில் இருந்து, இன்மொழி கூறி அந்நோயைத் தணிவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த கடமையாகும். ஆனால், காம நோயால் நாம் வருந்திக் கிடக்கும்போது நம் காதலன் வந்து அது தீர்த்தான் அல்லல், கைத் தொழில் வல்ல கம்மியன், அழகுறக் கழுவித் தூய்மை செய்யாத முத்து, தன் பேரொளி:ை மறைத்துக் காட்டுவது போல், நானும், அவனொடு கொண்ட புணர்ச்சியால் பெற்று விட்ட என் புதுநல அழகைப் பிறர் கண்டுகொள்ளவாறு, என் பெண்தன்மையால் மறைத்து, மனத்துயர் மிக்குக் கிடக்க, புலால் நாறும் கடல்நீர் நெறித்தலால், அதுகாரும் மலரா திருந்த பேரரும்புகளெல்லாம் மலர்ந்து மணக்கும் புன்னை மரங்கள் நிறைந்த கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன், அவன் பால் அன்புகொண்டு, அவன் மார்பு தந்த நோயால்

வருந்தும் என் நிலையினை அறிந்திலனே; என்ன காதலனோ அவன் ?’’

                       “நோயலைக் கலங்கிய மதனழி பொழுதில் 
                        காமம் செப்பல், ஆண் மகற்கு அமையும் 1
                        யான் என் பெண்மை தட்ப, நுண் ணிதின் தாங்கிக்,
                        கைவல் கம் மியன் கவின் பெறக் கழாஅ
                        மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக், குவியிணர்ப்
                        புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன், 
                        என்ன மகன் கொல் தோழி! தன் வயின்,
                        ஆர்வம் உடையராகி, - 
                        மார்பு அணங்குறுநரை அறியாதோனே’. 

. . - - -நற்றிணை 94

   அடுத்த செய்யுள், பிரிவால் வருந்தும் தலைவியைத் தோழி ஆற்றுவிப்பதைக் கூறுகிறது. தண்ணிர் அறவே இல்லையாம்படி வறண்டுபோன், கடக்கமுடியாவாறு நீண்டு. கிடக்கும் பெருவழியில், வெண்ணிற ஆடையை விரித்தும் போட்டாற்போல், வெயில் காய்வதால், வெப்பம், மிகுந்தி தினைத்தாலும் நடுங்கப் பண்ணும் கொடுமை வாய்ந்ததா