பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 தமிழர் வரலாறு

களையும் கொண்டு பருத்துவிடுமாதாலின், அவற்றை நன்கு ஆர்ந்து அமர்ந்து சிந்தித்தே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்:

கொளுக்களின், சிற்சில, நம்புதற்கு உரிய அல்லவாம் தன்மை:

தொகுப்பாசிரியரால், பாக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்களில், சில கொளுக்கள், வழி வழியாக வந்த காதுவழிச் செய்திகளைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் வெறும் ஊகங்களைச் சிற்சில இடங்களில் கண்மூடித்தனமான் ஊகங்களையே, கொண்டுள்ளன என்பது நன்கு தெரிந்த ஒன்று; எடுத்துக்காட்டுக்கு : புறநானுாற்று 76, 77 ஆகிய பாக்கள், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை, இடைக்குன்றார்க் கிழார் புகழ்ந்து பாடியனவாகக் கூறப்பட்டுளது. 78 இவ்வாறு கூறுகிறது. ஒருவனை ஒருவன் வெற்றிகொண்டு கொல்வதோ, ஒருவனுக்கு ஒருவன் தோற்றுப் போவதோ புதுமையான ஒரு செயல் ஆகாது : இது, உலகில், தொன்று தொட்டு இருந்துவரும் இயல்பான நிகழ்ச்சி ஆகும் : ஆனால் ஊர்ப்பொதுவிடத்தே நிற்கும் பருத்த அடிமரத்தை யுடைய வேம்பின் பெரிய கிளைகளில் உள்ள இளந்தளிரை, நீண்ட உழிஞைக் கொடியோடு கலந்து கட்டிய தேன் சொட்டும் மாலையைச் சிறக்கச் சூடிக் கொண்டு, தெளிந்த ஒசையை வெளிப்படுத்தும் போர்ப்பறை ஒலிக்க, நாடு நிறைந்த செல்வத்தையுடைய, பசும் பொன்னால் பண்ணப்பட்ட அணிகளை அணிந்த நெடுஞ்செழியன் பெருமையையும், தலைமையையும் அறியாமையால், ஒன்றுகூடிப் போரிடவந்த இருபெருவேந்தர், ஐம்பெரும் வேளிர் ஆகிய ஏழரசர்களின் கொற்றம் அடங்கத் , தான் ஒருவனாகவே நின்று போரிட்டு, அவர்களை வென்று அழித்த நிகழ்ச்சியை உலகம் தோன்றிய நாள் தொட்டு, இந்நாள்வரை யாம் கேட்டறியோம்.

                 ‘ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்
                  புதுவதன்று : இவ்வுலகத்து இயற்கை : 
                  இன்றின் ஊங்கோ கேளலம் : திரள் அரை
                  மன்ற வேம்பின் மாச்சினை ஒன்தளிர்