பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

133

எய்து என்ப, தம் செய்வினை முடித்து' எனக்
கேட்பல் :எந்தை ! சேட்சென்னி ! நலங்கிள்ளி !
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியாதோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திகிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருளவல்லை ஆகுமதி ! அருளிலர்,
கொடானம் வல்லுநர் ஆகுக!

கெடாத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே".
-புறம் : 27

குளமுற்றத்துத் துஞ்சிய சோழன் :

கிள்ளிவளவன் என்ற பெயருடைய மற்றொரு சோழன், சோழச் சிற்றரசர்கள் எனும் பொருளுடைய வாய கிள்ளி, மற்றும் வளவன் என்ற பெயர்களால் அழைக்கப்படுவார்களைக் காட்டிலும், மிகுதியான பாக்களாலும், மிகுதியான புலவர்களாலும் பாராட்டப் பெற்றுள்ளான். இவன், இறப்பிற்குப் பின்னர்க், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளான். புறநானுாற்றுக் கொளுக்களின்படி, இவன், தன்பெருமை குறித்துப் பாக்கள் புனைந்த பத்துப் புலவர்களைப் புரத்தவனாவன். இவன் புலவர்களைப்யேனும் பெருஞ்செயவையே புலவர்களும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். சேரர் தலைநகராம் வஞ்சியை முற்றியிருந்த இவன் செயல், இருபாக்களில் பாடப்பெற்றுளது. ஆதலின், ஒரு சேர அரசனோடு, இவன் பகை கொண்டிருந்தான் எனத் தெரிகிறது, "பகைவரை அழிப்பை ஆயினுத், அழிக்காது பிழைத்துப் போக விடுவையாயினும், அதனால் உனக்கு வரும் பயனை, நான் சொல்லத் தேவையில்லை; அதை நீயே, அனந்து அறிந்து கொள்வாய்.