பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

139


துணிந்து கொண்டுள்ளார். பத்ம புராணம், இம்மூன்று தமிழரசர் குலங்களையும் ஆரிய வம்சத்துத் துர்வாசு வழியில் வந்தவராகக் கொள்கிறது. (Padma Puranam VI 250 : 1-2. referred to by Pargiter. Anc. Ind. History Trad. Page : 108) தமிழர்களுக்கு, ஆரியத் தகுதிப் பாட்டினைக் கற்பித்துக் கொண்டவர்கள், புராணங்கள் பற்றித் தெளிவான அறிவிற்கு மாறாகக், குறைந்த அறிவினையே பெற்றுள்ளனர், பெண்பாற்புலவர். சிபியைச் சோழர்குலச் சிற்றரசன் எனத் துணிந்து கொண்டுள்ளார்.

கரிகாலன், எத்துணைப் பாவலர்ப் பெரும்புரவலனோ, அத்துனைப் பெரும் புலவனாகக் காணப்படுகிறான் கிள்ளிவளவன். அவன் புகழ்பாடிய புலவர், "தேன்போலும் இனிய ஒலி எழுப்பும் நரம்பு தொகுக்கப் பெற்ற சிறிய யாழுக்கு உரியபாண குளத்து வாழ் யாமையைப், பற்றுக் கோவில் கோத்து எடுத்தாற்போல, நுண்ணிய கோலில் பிணிக்கப்பட்ட, தெளிந்த ஓசை எழுப்பும் கண்ணுடைய, பெரிய உடுக்கையின் ஓசை இனிதாக எழுவது காண்க: இவ்விடத்தே சிறிது இளைப்பாறிச் செ ல் வோ மா க என்றெல்லாம் பலப்பல கூறிக் கேள்விமேல் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு நிற்கும், மூத்த, வாய்மையில் வழுவால் இரவலனே! நான் கூறுவது கேட்பாயாக! தைத்திங்களித தண்ணெனக் குளிர்ந்திருக்கும் குளத்து நீர் போலக், கொள்ளக் கொள்ளக் குறைதல் அறியாத பெருஞ்சோற்று மலையையுடைய பெரிய நகரத்தில், சோறு ஆக்கும் நெருப்பல்லது, பகைவர் மூட்டிய நெருப்பினைக் காண்பது இயலாவாறு சோற்றையும், உண்ணிரையும் விளைவிக்கும் அத்தகு நாட்டின் வேந்தனாம் கிள்ளிவளவன் நல்ல புகழை நினைந்து செல்வீராக!"

"தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்துவாழ் யாமை காழ்கோத்தன்ன,
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கினை,
இனிய காண்கு இவண் தணிகெனக் கூறி