பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழர் வரலாறு


பண்டை நாட்களில் இருந்ததுபோல், போர், ஒருவீர விளையாட்டாக, இல்லாமல், கொடிய காட்டுமிராண்டிச் செயலாகி விட்டது. பி ற் கா ல த் தை ச் சேர்ந்த மற்றொரு சேர அரசனாம், தொண்டித் தலைவன் இரும்பொறை என்பான், மூவன் என்பான் ஒருவனை வெற்றி கொண்டு, அவனுடைய, முள்போல் கூரிய, வலிய பற்களைப் பிடுங்கி, அவற்றைத் தன் கோட்டை வாயிற் கதவில் பதித்து வைத்தான்.

"மூவன்
முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்

கானலம் தொண்டிப் பொருநன்".
-நற்றிணை : 18 : 2 - 4

அடிக்குறிப்பு :

கிள்ளி வளவன் புகழ்பாடிய புலவர்களுள், இருவர், நலங்கிள்ளியையும் பாடிய கோவூர் கிழாரும், ஆலத்துார் கிழாருமாவர். 'கிழார்' என்பதன் பொருள், ஒன்றை உரிமையாகக் கொண்டவர், அல்லது ஒன்றிற்கு உரிமை உடையவர் என்பது பொருளாம். ஆகவே, புலவர்கள், ஆலத்துளர் கிழார் அல்லது கோவூர் கிழார் எனப் பெயிரிடப்படக்காணின், அச்சொற்களை, முறையே, ஆலத்துார்ப்புலவர் அல்லது கோவூர்ப் புலவர் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். இத்தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாக்களைப் பாடிய பல புலவர்கள், இயற்பெயர் உடையராகார்; ஊர்ப் பெயரினாலேயே பெயரிடப் பட்டுள்ளனர்; ஆரியக்கடவுள் பெயர்களை மக்களுக்குச் சூட்டும் வழக்கம் நடைமுறைக்கு வந்த கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர், இயற்பெயர்கள் அருகி இடம் பெற்றதாகவே தெரிகிறது. அக்காலத்திற்கு முன்னர் எப்பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அவை, "இரும்பிடர்த் தலையார்" என்பது போலச் சிறப்பு குறித்து இடப்பட்ட பெயராகவும், 'மாங்குடி கிழார்' என்பது போல, ஊர்ப்பெயராகவும், 'இளநாகனார்' என்பதுபோலச்,