பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழர் வரலாறு

களின் ஒன்பது குடைகளையும், ஒருநாள் போரில் அழித்த செங்குட்டுவன்.

இவ்வளவன் கிள்ளி, இன்றைய எழுத்தாளர் சிலரால், கிள்ளிவளவனாகக் கொள்ளப்பட்டுள்ளான். மேலே எடுத்துக்காட்டிய பாக்கள் உறுதி செய்வதுபோல, கிள்ளிவளவன் மிகப் பெரிய போர் வீரன், சேரர் தலைநகரை, ஒரே பகலில் அழித்துத் தரைமட்டம் ஆக்குமளவு அச்சேரரோடு கொடும்பகை உடையவன் என்பதைக் கண்டிருந்தும், அவன், சேரன் செச்குட்டுவனின் துணை நாடினான், அல்லது, பெற்றான் என்பதை நம்புவது நம்மால் இயலாது. கிள்ளி, வளவன் என்ற இருசொற்களும், வறிதே, சேர அரசர்கள் என்று மட்டுமே பொருள்பட்டு, சோழ நாட்டின் எந்த அரசனைக் குறிக்கவும் வழங்கப்பெறும். ஆகவேதான், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் அக்குறிப்பிட்ட சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என அழைக்கப்பட்டுள்ளான்;

செங்குட்டுவன் படைத்துணையை வேண்டிப் பெற்றவன், இளவரசனே அல்லது, ஆட்சியில் இருக்கும் பேரரசன் அல்ல ; ஆகவே, நெடுமுடிக்கிள்ளி, ஒரு பட்டத்து இளவரசன் அல்லன் ஆகவே, திருவாளர், கிருஷ்ணசாமி அய்யங்கார் கொண்டதுபோல, இந்தச் சோழனை, நெடுமுடிக் கிள்ளியாகக் கொள்வது தவறு.

Manimekalai in its Historical setting என்ற நுாலின் ஆசிரியர், பக்கம் 35-ல் நெடுமுடிக்கிள்ளி, என்பானைக், செங்குட்டுவனின் சமகாலச் சோழனாகக் கொண்டுள்ளார். இது, செங்குட்டுவனின் சம காலத்தவன், சோழன் பெருநற்கிள்ளி எனக் கூறும் சிலப்பதிகார உரை பெற கட்டுரைக் கூற்றுக்கும், அவன், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியாவன் எனக் கூறும், உரைபெரு கட்டுரையின் இப்பகுதிக்கான அடியார்க்கு நல்லார் உரைக் கூற்றுக்கும் முரண்பாடாக உளது. திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள்,