பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழர் வரலாறு


மணிமேகலை கூறும் கிள்ளிவளவனுக்கும், புறம் பாராட்டும் கிள்ளிவளவனுக்கும் எவ்விதஉறவும் இல்லை.

இக்காலத் தமிழ்ப்புலவர்களின் பாக்களில், ஆரியக் கருத்துக்கள், மிகப் பெருமளவில் இடம் பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதே. ஆலத்துார் கிழார், பார்ப்பனர்க்குக் கொடுமை செய்வதால் உளவாகும் பாவம் குறித்துப் பேசுகிறார் ; தர்ம சாஸ்திர ஆணைகளைக் குறிப்பிடுகிறார்.

"பார்ப்பார்த் தப்பிய கொடுமை", "அறம் பாடிற்று".
-புறம்: 34 : 3 - 7

இக்கிள்ளிவளவன் காலத்தில், ஆரியக் கருத்துக்கள் பரவியது மட்டுமல்லாமல், அவன்தானும் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளான். அவன் இறப்பு, புலவர் மூவரால் வருந்திப் பாடப்பட்டுளது. அவர்களுள் ஒருவர், அம்மன்னன் அடக்கம் செய்யப்படவேண்டிய தாழியைச் செய்து தரவேண்டிய குயவனை விளித்து, மன்னனை அடக்கம் செய்வதற்கு வேண்டும் மிகப் பெரிய தாழி பண்ணவேண்டின், இப்பேருலகையே திகிரியாகக் கொண்டு, பெருமலையையே, உரையாசிரியர் மேருமலை எனப் பொருள் கொண்டுள்ளார்) கண்ணாகக் கொள்வாயாக எனக் கூறியுள்ளார்.

"அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனையாயின், எனையதுாஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை

மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே".
-புறம் : 228 : 12:18

பெருநற்கிள்ளி :

புறநானூறு விளக்கம் அளிக்கும், பழைய சோழர் குலத்தில் வந்து சிறப்பு வாழ்ந்த கடைசிக் காவலன்