பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு:

புறநானூற்றுப் பாக்களுக்குப் பொருள் விளக்கம் அளிக்கும்

கொளுக்கள்

"நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்ற தொகை துரல்களில் உள்ள அனைத்து அகத்துறைப் பாடல்களுக்கும், திணையும், துறையும், பாடிய புலவர் பெயரும் கொடுத்திருப்பது போல், புறநானூற்றுப் பாடல்கள் நானுாறுக்கும் திணையும், துறையும், பாடிய புலவர் பெயரும் கொடுத்திருப்பதால், அது செய்தது, அப்பாடல்களைத் தொகுத்தவர் செயலாகும்.

"புறநானூற்றுப் பாக்களில், முதல் 286 பாக்களுக்கு, திணை, துறை, பாடிய புலவர் ஆகிய விளக்கங்களுக்கு மேலாக, அப்பாக்கள் பாடப்பெற்ற சூழ்நிலை, அப்பாக்களின் பாட்டுத் தலைவர்கள் ஆகிய விளக்கம் அளிக்கும் கொளுவும், அதை அடுத்துப் பொருள் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன".

"எந்தப் பாட்டோடு பொருள் விளக்கம் நின்றுவிடுகிறதோ, அந்தப் பாட்டோடு கொளுவும் நின்று விடுகிறது; ஆகவே, கொளு, பொருள்விளக்கம் ஆகிய இரண்டையும் செய்தவர் ஒருவரே; அவர் அந்நூலைத் தொகுத்தவரினும் காலத்தால் பிற்பட்டவராதல் வேண்டும். நூலைத் தொகுத்தவர் கி. பி. ஆறாம் நூற்றாண்டினராயின், கொளுவும், விளக்கமும் அளித்தவர், கி. பி. 12ஆம் நூற்றாண்டிற்கும், கி; பி. 16ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவராதல் வேண்டும்" என முடித்துவிட்டு (பக்கம் : 409. 410) அக்கொளுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கும் தகுதியுடையவல்ல என முடிந்த முடிவாக முற்றுப்புள்ளியும்