பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

159

 தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் புகழ்பாடும் புலவர் எண்மரும், அவனும், அப்போர் குறித்துப் பாடியிருக்கும் நற்றினை, நெடுந்தொகை, புறநானூறு ஆகியவற்றில் கலந்து கிடக்கும், பதினாறுக்கும் மேற்பட்ட அப்பாக்களை அரிதின் முயன்று தேடிப்பிடித்து, நுணுகி ஆய்ந்து, அப்போர் குறித்த பல்வேறு செய்திகளையும் அறிந்து கொண்டு தெளிவுற்ற நிலையில் அமைத்திருக்கும் கொளுக்கள், முழுக்க முழுக்க உண்மைவாய்ந்தவை : பழந்தமிழர் வரலாற்றை வரைவார்க்கு, வலுவான சான்றாக அமைய வல்லவை ஆகவும், அக்கொளுக்களை வரைந்தார்தம் ஆழ்ந்த அறிவினையும், அரு முயற்சியினையும், அருஞ்செயலையும் பாராட்ட மனமில்லையாயினும், அவை ஏற்கதக்கன அல்ல என இழிவுபடுத்துவது, நல்ல வரலாற்றுத் திறனாய்வு நெறி ஆகாது.

திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், தம்முடைய சோழர் வரலாறு மற்றும் ஆட்சி முறைபற்றிய திறனாய்வு நுாலில், (Studies in Chola History and Administration) கொளுக்கள் குறித்த, திருவாளர் பி. டி. எஸ். அவர்களின் இம்முடிவை விரிவாக ஆராய்ந்து, அது தவறான முடிவு என உறுதி செய்து, பின்வரும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்.

"தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர், அப்பாக்களைப் படித்தும், மரபு வழிச் செய்திகளை ஏற்றும், அந்நூலைத் தொகுத்தபோதே, அக்கொளுக்களைத், தாமே எழுதியிருக்க இயலாதா, ஒவ்வொரு பாக்களுக்குமான கொளுக்கள் அப்பாக்கள், தொகை நூலாகத் தொகுக்கப்படுவதற்கு முன்னரே, அப்பாக்களோடு இணைந்திருக்க இயலாதா என்ற வினாக்களுக்கு விடைகாண வேண்டியது இன்றியமையாதது என்பது திருவாளர் பி. டி. எஸ் அவர்களுக்குத் தெரியவில்லை".

why the author of the anthology could not have him self read the poems and accepted traditional information