பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

161


என அறவே மறுப்பது, வரலாற்று நூல்கள் எழுவதை, இயலாததாக ஆக்கிவிடும், ஒரு தவறான வழிகாட்டு நெறியைக் காட்டுவதாகும்"

"We can hardly expect that in the course of long centuries, the anthologies have been transmitted to us without errors in details have crept in. But for this reason, to cost a doubt on the accouracy of the whole groups of poems” and their colophous and to reject them wholesale is to apply standards of criticism, which would render all historical writings impossible" Page : 18.

புறநானூற்றுக் கொளுக்கள் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறும் திரு. பி.டி.எஸ். அவர்களின் கொள்கைக்கு மேலும் ஒருபடி மேலே சென்று, கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் அளிக்கும் சான்றுகளை வலுவான சான்றுகளாக ஏற்றுக்கொண்டு, புறநானூறு போலும் தொகை நூல்களையும், அவற்றின் கொளுக்களையும் ஏற்க மறுக்கும் வரலாற்றுப் பேராசிரியர் சிலரும் உள்ளனர்,

அத்தகையோரின் தவறான வழிகாட்டு நெறியினையும், வன்மையாக மறுத்துள்ளார். திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், இதோ அவர் கூறுவன காண்க:

திரு. வெங்கையா அவர்கள், "புறநானூறு எண்ணற்ற சோழ அரசர்களின் பெயர்களை... அறிவிக்கின்றன....ஆனால் அவை தரும் வரலாற்றுச் சான்றுகளையும் குறிப்பிட்ட ஒரு சோழ அரசனோடு தொடர்புபடுத்தும் செய்திகளையும் ஏற்றுக்கொள்வதில் பெரிதும், விழிப்புடையவராக இருக்க வேண்டும்." எனக் கூறுகிறார் என கொளுக்கள் பற்றிய அவர் . கொள்கையை அறிவித்துவிட்டு, அதைக் கீழ்வரும் வரிகளால், வன்மையாகக் கண்டித்துள்ளார்.

"தொகை நூல்கள் தரும், செய்திகளால், இத்தகு கட்டுப்பாட்டினை விதிக்கும் திரு. வெங்கையா அவ்ர்கள்,

த.வ. II-11