பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

163


proceeds forth with to accept unreservedly all the statements made in eleventh century inscriptions about events that happend, if at all, five centuries before their date...Now, one may ask whether any statement gains in trust worthiness mearly because, it is engraved on copper or stone and not written on palm leaf or other more perishabile material, and whether it is not possible for a deliberate inventom to get in to an epigraph, or for a correct tradition to be transmitted in successive copying of literary documents. The exaggerated caution assumed by some epigraphists in their approach to literary evidence, and the childish faith they occasionally exhibit in hugging the most palpable lies set down on stone and copper, may raise, a legitimate doubt". Page : 5.)

புறநானூற்றுக் கொளுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளத் தகுதியில்லாதன என்ற தம் கொள்கையில் திருவாளர் அய்யங்கார் அவர்களும் விடாப்பிடியாக இருப்பவர் அல்லர்:

367ஆம் எண் புறநானூற்றுப் பாட்டின் கொளு இது; "சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது".

இது குறித்துத் தம் கருத்தினைக் கூறும் திரு. அய்யங்கார் அவர்கள், "கொளுவில் கூறப்பட்டிருக்கும் மூவேந்தர் பெயர்கள், பாட்டில் இடம் பெறவில்லை எனினும் கொளு கூறும் செய்தி நம்புதற்கு உரியதே என நான் கருதுகின்றேன்" என அவரே கூறுவது காண்க. (பக்கம் :491)