பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

167

களப்ரன் என்னும் கலி அரசன் கைக்கொண்டு அதனை

இறக்கிய பின்.]

நன்கொடை ஆவணங்களைக் கல்லின் மீதோ, செப்புத் தகடுகள் மீதோ செதுக்கிப் பொறிக்கும் வழக்கம், கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர், அதாவது, தமிழ் நாடு, முழுமையாக ஆரிய நாகரீகச் செல்வாக்கிற்கு ஆட்பட்டுக் கோயில்களுக்கும், பிராமணர்களுக்கும் தானங்கள் செய்வது முறையான வழக்கமாகிவிட்ட அந்தக் காலத்துக்கு முன்னர்த், தொடங்கப்படவில்லையாகவே, முதுகுடுமி, தன்தானத்தோடு, செப்புப் பட்டயத்தை உடன் வழங்கவில்லை. ஆகவே தான் கி. பி. 600 வரையான தமிழக வரலாற்றிற்கு ஒளி காட்ட, எந்தக் கல்வெட்டும் முன்வரவில்லை. நற்கொற்றன் வழிவந்த, காமக்காணி நற்சிங்கன் என அழைக்கப்படும் ஒருவனுக்கு, இம்முறை, தெய்வத்துக்குப் படைக்கப்படும் புனித தீர்த்தமாம் நிலைபேறில்லாத் தண்ணிர் வார்த்து அளிப்பது மட்டுமல்லாமல், செப்புத்தகட்டில் செதுக்கிப் பொறிக்கப்பட்ட, அழிக்கலாகா, நன்கொடை ஆவணமும் தொடர, நெடுஞ்சடையன், அச்சிற்றுாரை மறுவலும் தானம் செய்த சூழ்நிலைகள் பின் வருமாறு: இவன் (நெடுஞ்சடையன்) ஆட்சியின் மூன்றாம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு நாள், மாடங்களையும், மதில்களையும் கொண்ட மதுரையில், சிலர் கூடியிருந்து, உரத்த குரலில் முறையிட்டுக் கொண்டிருந்தனர். அரசன், அவர்களைத் தன் அருகில் அழைத்து, உம் முறையாது எனக்கேட்டான். அவர்கள், "பலம் வாய்ந்த பெரும்படைக்குரிய ஆற்றல் மிகு அரசே ! வெல்லற்கரிய தன் வேற்படை வீரர்துணையால், கடல்சூழ் உலகைக் காத்துவந்த பேரரசனாம், பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியாம் உன் குல முன்னோனால், வானளாவும் மலர்ச் சோலைகள் மலிந்த பாகனூர்க் கூற்றத்தைச் சேர்ந்த ஒரு சிற்றுார், வேள்விக்குடி எனப் பெயரிடப்பட்டு, அறநெறி மாறுபடா நிலையில் தானமாக அளிக்கப்பட்டது. அவ்வாறு நின் முன்னோனால் அளிக்கப்பட்ட அவ்வூர், பின்னர் அழிக்கலாகாக் கடல் போலும் பெரும்படையுடைய களம்