பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

169


நாட்டால்தன் பழமையாதல்
காட்டினான் அங்கு அப்பொழுதெய்
காட்ட, "மேனாள் எம்குரவரால் பன்முறையில்
தரப்பட்டதளை
எம்மாலும் தரப்பட்டது" என்று
செம்மாந்து அவன் எடுத்தருளி.
விற்கைத் தடக்கை விறல்வேந்தன்
கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கர்க்குத்
தேரோடும் கடல்தாளையன் நீரோட்டிக்

கொடுத்தமையின்"


நெடுஞ்சடையன் வேள்விக்குடியை மறுபடியும் தானம் செய்வதை வாய்மொழிச் சான்றுகளைக் கொண்டே உறுதி செய்தான் ஆகவே, முதுகுடுமி, அவனுக்கு மூன்று நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது என்பதும் இடையில் குறிப்பிடத்தக்கதாம்.

பிறிதொரு புறநானூற்றுப் பாட்டில் புலவர் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்த்து, "நெடிது வாழ்க!" என வாழ்த்தும் அவ்வாறு வாழ்த்தும் அறிகுறியாகத் தங்கள் கைகளை உயர்த்தும் நான்கு வேதங்களையும் க ற் ற றி ந் த பார்ப்பனர்கள் எதிரில் வணங்கி நிற்பாயாக" எனக் கூறுகிறார்:

"இறைஞ்சுக! பெரும! நின்சென்னி, சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே"
- புறம் : 6 : 19-20


முக்கண் இறைவன் கோயிலை வலம் வரும்போது மட்டுமே அரசர்களின் வெண்கொற்றக் குடை தாழ்த்தப்படுமா என்றும் அவர் கூறுகிறார்.

"பணியியரத்தை, நின்குடையே, முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே."
-புறம் 17-11