பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

171


குணா அது, கரைபொரு தொடுகடல் குணக்கும்;

குடா அது, தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்"
-புறம் 6 : 1.4:

[புறநானூற்றில், இக்கருத்தில், வேறு இருகுறிப்புகளும் உள்ளன. முதலாவது, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தது:- "தென் குமரி வடபெருங்கல்" (புறம் 17 : 1). இரண்டாவதாக, மிகவும் பிற்பட்ட காலத்தவனாகிய, பெரும்பாலும் 6 வது நூற்றாண்டைச் சேர்ந்தவனாகிய, பெருங்கோக்கிள்ளிக் கோப்பெருஞ்சோழனைக் குறிப்பது: அதில், ஓர் அன்னப்பறவை, குமரிக்கரையில் அயிரை மீன் அருந்திச், சோழ நாட்டைக் கடந்து, வடநாட்டுப் பெருமலைக்குச் செல்வதாகக் கூறப்பட்டுளது:-

"குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை யாயின், இடையது

சோழ நன்னாட்டுப் படினே".
-புறம் : 67; 6-8]

நால்வேத நாகரீக வளர்ச்சிக்குப் பேராதரவு நல்கும் பெருஞ்செயல்கள் அல்லாமல், முதுகுடுமிப், பகையரசர்களோடு போர் மேற்கொள்வதும் செய்திருந்தான். குறிப்பிட்ட ஒரு சோழ, அல்லது பாண்டிய அரசனோடு போரிட்டதாகக் கூறப்படவில்லை. சில குறுநிலத்தலைவர்களை அவன் வென்றிருக்கக் கூடும். புலவர் இவ்வாறு கூறுகிறார்: "பகைப்படையைச் சேர்ந்த தேர்கள் விரைந்து ஓடி ஓடிப் பண்ணிய குழிகளைக் கொண்ட, அப்பகைவரின் பேரூர்த் தெருக்களில், வெள்ளிய வாயையுடைய கழுதைகளை, ஏர்களில் வரிசை வரிசையாகப் பூட்டி உழுது, அப்பகைவரின், அகன்ற பெரிய அரண்களைப் பாழ்படுத்தினை பகைவர் நாட்டின் பறவைக் கூட்டம் ஓயாது கூடியிருந்து ஒலிக்கும் வண்ணம் வளம் கொழிக்கும் விளை நிலங்கள், வெள்ளிய தலையாட்டம் கொண்ட, போர்ச் செருக்குமிக்க குதிரைகளின் குளம்புகளால் பாழுற்றுப் போமாறு, போர்த்