பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழர் வரலாறு


தேர்களை விரைந்து போக்கினை; ஆடும் இயல்பும், பெரிய கழுத்தும், பருத்த கால்களும், சினம் கொழிக்கும் சிறு கண்களும், ஒளி விளங்கும் தந்தங்களும் உடைய நின்படைக்களிறுகளை, அப்பகைவரின், காவல்மிக்க உண்ணு நீர்க்குளங்களில் குளிப்பாட்டினை -" அவன் வெற்றி கொண்ட போர்க்களம், இது எனத் தெளிவாகக் குறிப்பிடப்படாத நிலையில், இது அவ்வரசனைப் பற்றிய பொதுவான புகழ் உரைகளேயல்லது வேறு அன்று என்றே கோடல் வேண்டும்:

"கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்,
பாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெண்டளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பனை எருத்தின்,
பாஅடியான், செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறவர

காப்புடைய கயம்படியினை,"
- புறம் 15 : 1-10

தலையாலங்கானத்துச் செருவென்றான்

இவ்வரசன் (முதுகுடுமிப் பெருவழுதி) இறந்த பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்தான். பத்து புறநானூற்றுப் பாடல்களிலும், ஒன்பது அகநானுற்றுப் பாடல்களிலும், வேறுசில சிறு பாடல்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பத்துப்பாட்டில், மிக நீண்ட பாட்டாகிய மதுரைக்காஞ்சி, அதனினும் சிறிய பாட்டாகிய நெடுநல்வாடை ஆகிய இரு பாடல்களின் பாட்டுடைத் தலைவனும் அவன் இவன். அக்காலத்திய பாண்டிய அரசர்களில், இவனே மிகச்சிறந்தவனாதலின் போலும் இவனைப் பற்றிய பாடல்கள், இத்துணைப்