பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

177


பழந்தமிழ்ப் புலவர்களாம் பேரறிஞர் குழாத்தின், பிற்கால உறுப்பினராம் கல்லாடனார், "பொன்னால் அணி செய்யப் நெடிய தேர்ப்படையினையுடைய பாண்டியப் பேரரசனாம், கணைய மரம் போலும் திண்ணிய வலிய தோளினையும், தன் விருப்பிற்கேற்ப இயங்கவல்ல தேரினையும் உடைய நெடுஞ்செழியன், தன்னோடு பகை கொண்டு போர் தொடுத்து வந்த ஏழரசர்களையும், முற்றவும் வெற்றிகொண்டு, தலையாலங்கானத்துப் போர்க்களத்தில் எழுப்பிய வெற்றி ஆரவாரப் பேரொலியினும் பெரிது, தலைவிக்கும், தலைவனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் களவுக் காதல் குறித்து, ஊரில் அம்பல் கூறித்திரிவார் எழுப்பும் அவர் உரை" என்கிறார்.

"பொன் அணி நெடுந்தேர்த், தென்னர் கோமான்
எழுவு உறழ் திணிதோன் இயல்தேர்ச் செழியன்
தேரா எழுவர் அடிப்படக் கடந்த

ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிதே"
-அகம்: 109:3-6

இப்போர், மதுரைக் காஞ்சியிலும் விளக்கப்பட்டுளது. அதில் இவ்வாறு கூறப்பட்டுளது : "காற்றுபோல் விரைந்து சென்று, பகைவர் நாடுகள் அழிந்து போக ஆங்கெல்லாம் எரியைப் பரப்பித்,தலையாலங்கானத்துப் போர்க்களத்தில் பகைவர்க்கு அச்சம் மிகுமாறு இருந்து, முடிமன்னர் இருவரும் குறுநிலத் தலைவர் ஐவரும் ஆக எழுவரும் இறந்து போகப் போரிட்டு, அப்பகைவரின் போர் முரசுகளைக் கைக் கொண் டு களவேள்வியும் கண்டு புகழ் கொண்ட, மாற்றாரை அழிக்கும் ஆற்றல் மிகு உயர்ந்த புகழ் கொண்ட வேந்தன்.”

"கால்என்னக் கடிது உராஅய்,
நாடுகெட எரிபரப்பி
ஆலங்கானத்து அந்சுவர இறுத்த,

அரசுபடி அமர் உழக்கி

த. வ. II-18