பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தமிழர் வரலாறு

சமண, பெளத்த முனிவர்கள், அடுத்த நூற்றாண்டில் நகரத்தே மடங்களில் வாழ்வது போல் அல்லாமல், நகர்ப்புறத்தே பூம்பொழில்களில் வாழ்ந்தனர்: "வண்டுகள் வந்து மொய்க்குமாறு, மலரும் பருவம் வந்துற்ற, தேன் நிறைந்திருக்கும் தோற்றத்தை உடைய மலர்களையும், மணம் தரும் புகைகளையும் ஏந்தி, இரவு உண்ணாவிரதம் கொண்டோர், வாழ்த்தாநிற்ப, இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும், இன்று இவ்வுலகில் நடைபெறும் நிகழ்கால நிகழ்ச்சிகளோடே உணர்ந்து தேவருலக நிகழ்ச்சிகளையும், இந் நிலவுலக திகழ்ச்சிகளையும் முழுமையாக உணரவல்லாரும், தமக்கு ஏற்புடைய விரதங்களையும், அவ்விரதங்கள் மேற்கொள்வதால் தளர்ந்துவிடாயாக்கை நலத்தையும், கல்வி கேள்விகளால் நிறைந்தும் செருக்குதல் அறியா அடக்கத்தையும் உடைய ஆன்றோர் பெருமக்கள், ஒன்று கூடியிருந்து நோற்பதற்குக் கல்லைப் பொளிந்தாற் போன்ற ஒடுங்கிய வாயையுடைய நீர்நிறை குண்டிகையைப், பல வடங்களைக் கொண்ட நூல் உறியில் ஏந்தி, உலகத்து உயிர்களுக்கு அருளுதலையே செய்ய இருந்து அறம் நோற்கும், கண்டார் வியக்கும் கவின் மிகு பூஞ்சோலைகளாம் அமண் பள்ளிகள்."

"வண்டுபடப் பழுநிய, தேன்ஆர் தோற்றத்துப்,
பூவும், புகையும் சாவகர் மதிச்சச்,
சென்ற காலமும், வரூஉம் சமயமும்,
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து,
வாலும், நிலனும், தாம் முழுதுணரும்,
சான்ற கொள்கைச், சாயா யாக்கை,
ஆன்று அடங்கு அறிஞர், செறிந்தனர் நோன்மார்,
கல்பொளித்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச்சிமிலி நாற்றி, நல்குவரக்,
............................................................

இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கை"
- மதுரைக்காஞ்சி : 475.483 : 487.