பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழர் வரலாறு

மொய்க்குமளவு பெற்றுவிட்ட வளமார் பெருவாழ்வினையும், உலகியல் கல்லா இளம் பருவத்தினராய சிறார்கள் சொல்லிச் சொல்லிக் காட்டுவாராயினர்”.

பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன்
இழும் என் சும்மை, இடனுடை வரைப்பின்
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்,
இசையேன் புக்கு, என் இடும்பைதீர,
எய்த்த மெய்யேன், எய்யே னாகிப்,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக்,
கைக் கசடு இருந்த என் கண்ணகன் தடாகி
இருசீர்ப் பாணிக்கு ஏற்ப, விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின், ஒன்றிய
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்,
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்,
பருகு வன்ன அருகாம் நோக்கமொடு
உருகு பவையோல் என்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்து இறை கூடி
வேரொரு நனைத்து வேற்றிழை நுழைந்த
துன்னல் சிதா அர் துவர நீக்கி,
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி அன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பின் இன்னகை மகளிர்
போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்