பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தமிழர் வரலாறு


அம்மாநகருள் நுழைந்தபோது நாம் கண்ணுற்ற, மக்களின் ஆரவாரப் பெருங்கூட்டத்தையும், குழப்பத்தையும் மீண்டும் காட்டத் தொடங்கி விட்டது. Madras Christian College Magazine 1901. P. 120-184.

புலவர்களைப் புரத்தல்:

பழைய தமிழரசர்கள் ப ல ரை யு ம் போலவே, நெடுஞ்செழியனும், புலவர்களைப் பேணிகாக்கும் மிகப்பெரிய புரவலனாவன். புகழ் பெற்ற தலையாலங்கானப் போர் நிகழ்வதற்கு முன்னர்ப், பதினெட்டு வரிகளைக் கொண்ட ஒரு பாடலை அவனே பாடியுள்ளான். அதில் அவன் இவ்வாறு கூறுகிறான்; "இவன் ஆளும் நாட்டைப் புகழ்ந்து கூறுவார் நம்மால் எள்ளி நகையாடற்குரியர் என்றும், இவனோ நனிமிகு இளையன் என்றும், நான் வெறுக்கப் பழித்துரைத்து, ஒலிக்கும் மணிகள், இருபக்கமும், ஒன்றோடொன்று மாறி ஒலிக்க, எடுத்துவைக்கும் பெரிய கால்களைக் கொண்ட நெடிய களிற்றுப் படையினையும், தேர்ப்படையினையும், குதிரைப் படையினையும், படைக்கலப் பயிற்சி வல்ல வீரர்களையும் உடையேம் யாம் எனக்கூறிச் செருக்குற்று. என் பேராற்றல் கண்டும் அஞ்சாது, ஆணவம் மிக்க புல்லிய சொற்களைச் சொல்லிய அப்பகையரசர்களைப், போரில் சிதைந்தோடப் போரிட்டு வென்று, அவர்களின் போர் முரசுகளோடு அவர்களையும் கைக்கொள்ளேனாயின், என்குடை நிழற்கீழ் வாழும் என் நாட்டு மக்கள். தாங்கள் வாழத் தகுதி வாய்ந்த நிழல்தரு நிலம் காண மாட்டாது, கொடியன் எம் காவலன் என, என் அரசைப் பழிதுாற்றும் கொடுங்கோலன் ஆவேனாகுக நான்; சிறந்த தலைமையும் பரந்த கேள்வியும் வாய்ந்த மாங்குடி மருதன் முதலாக உள்ள, உலகெலாம் புகழும் புலவர் பெருமக்கள், என்னையும் என் நாட்டையும் பாராட்டுவதைக் கைவிடுவாராக! என்னால் புரக்கப்பட வேண்டிய என் சுற்றத்தாரின் வறுமைத் துயர்க் கொடுமை பெருகுமளவு, நான் "வறுமையுற்றுப் போவேனாகுக."{{Nop}}