பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் : XXIV
"அகத்திலும், புறத்திலும் ஆரியக் கருத்துக்கள்"

கடவுள்கள் :

கடவுள்கள் : கி. பி. நான்காம், மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட பாடல்களில், வடஇந்திய (ஆரிய) கருத்துக்கள், கொள்கைகள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பெரும்பாலும், இடைப்பிறவரலாம் குறிப்புக்களாக, பையப் பைய, மிக மிகப் பையப் பைய நுழைந்துவிட்டன. இவை, பெரும்பாலும், பிற்காலப் புலவர்களால் பாடப் பெற்ற பாக்களிலேயே காணப்படுகின்றன. தூய தமிழ்க் கருத்துக்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு நோக்கின், இவை போலும் ஆரிய இடை நுழைவுகளின் மொத்த எண்ணிக்கை மிகமிகக் குறைவே. ஆரிய இடை நுழைவுகளை, அவை முக்கியமாக இடம் பெற்றிருக்கும் அகநானுாறு, புறநானூறுகளிலிருந்து எடுத்து, இவ்வதிகாரத்தில் தொகுத்தளித்துள்ளேன். சிவன், அகத்தில் ஒரு முறையும், புறத்தில் ஐந்து முறையும் குறிப்பிடப்பட்டுள்ளான். ஒரு குறிப்பு, மலையை வில்லாகவுப், பாம்பை வில் நாணாகவும் கொண்டு, ஒரு கணை ஏவி, மூன்று கோட்டைகளையும் அழித்து, அசுரர்களை அடக்கித் தேவர்களுக்கு வெற்றி தேடித் தந்தது. அதில், சிவன், அழகிய நீலநிறக் கழுத்துடையனாகவும், அழகிய தலையில், பிறைத் திங்களைச் சூடியவனாகவும், ஒளிவிடும் நெற்றிக் கண்ணை உடையவனாகவும் குறிப்பிடப் பட்டுள்ளான் :

"ஓங்குமலைப் பெருவில், பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு, மூவெயில் உடற்றிப்,
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த,