பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகத்திலும் புறத்திலும் ஆசியக் கருத்துக்கள்

201


புறநானுாற்றுப் பாட்டு ஒன்றில், சிவன், பலராமன், கிருஷ்ணன், மற்றும் சுப்பிரமணியன் ஆகிய கடவுள்கள் விளங்க உரைக்கப்பட்டுள்ளனர். "ஆனேற்றின் மீது அமர்ந்து உலா வரும், எரிபோல் ஒளிவிடும் சடைமுடி, பகைவரால் வெற்றி கோடற்கு அரிய மழுப்படை, நீலமணி போலும் கழுத்து ஆகிய இவற்றை உடையோனும், கடல்வளர் வலம்புரிச்சங்கு நிகர்க்கும் வெண்ணிறத் திருமேனியினையும், கொலை விரும்பும் கலப்பைப் படையினையும், பனைக் கொடியினையும் உடையோனும், மாசு போகக் கழுவப் பட்ட நீலமணி போலும் நிறம் வாய்ந்த மேனியினையும், வானுற ஒங்கிய கருடக் கொடியினையும் உடைய, எக்காலத்தும் வென்றியே விரும்புவோனும் நீலமணி நிறம் வாய்ந்த மயிலைக் கொடியாக உயர்த்திய, மயில் அல்லது யானை மீது உலாவரும். எக்காலத்தும் வெற்றியே காணும், செய்யோன்" .

"ஏற்று வலன் உயரிய எரிமருள் அவீர்சடை,
மாற்றரும் கணிச்சி, மணிமிடற்றோனும்,
கடல்வளர் புரிவனை புரையும் மேனி
அடல் வெம்நாஞ்சில் பனைக் கொடியோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல்வெய்யோனும்,
மணிமயில் உயரிய மாறா வென்றிப்

பிணி முக உணர்தி ஒண் செய்யோனும்."
-புறம் : 56 : 1.8

கிருஷ்ணனையும் பலதேவனையும் போலக் காணப்படுகின்றனர் என ஒரு சோழனையும், ஒரு பாண்டியனையும் ஒரு சேர வைத்துப் பாராட்டும் நிலையில், கிருஷ்ணலும், பலதேவனும் மேலும் ஓர் இடத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர் :

"பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீலநிற உருவின் நேமியோனும்"
-புறம் சுக 14:5.