பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

203


இக்கதையின் மூலம், எனக்குத் தெரிந்தவரை, சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை; இது, ஒரு, வேளை, கிருஷ்ணன் பற்றிய ஆரியப் பழங்கதை அல்லாமல், மாயோன் பற்றிய தமிழ்ப் பழங்கதையாதல் கூடும்.

அக்கதையின், இன்றைய வடிவம் சிறிதே மாற்றப்பட்டுளது. ஆயர் மகளிர், கிருஷ்ணன் திருடிச் சென்ற தங்கள் ஆடைகளை அணிந்த கொள்ளவே விரும்பினர்.

பரசுராமன் அகத்தில், ஒரு முறை குறிப்பிடப் பட்டுள்ளான்; அது, பின்னர், எடுத்துக் காட்டப்படும், அகத்தில் கிருஷ்ணன் பற்றிய, மேலும் ஒரு குறிப்பும் உளது. "நிறைந்த ஒளிக் கதிர்க்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழிப் படையுடைய திருமாலின் பகைவர் அழிவுக்குக் காரணமாய அகன்ற மார்பில் கிடக்கும் மலர் மாலை போலப் பன்னிறம் வாய்ந்த, அழகிய வானவில்:"

"நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்

திருவில்."
-அகம் : 175 : 14.18.

இராமன், புறத்தில் ஒரு முறையும், அகத்தில் ஒரு முறையும் குறிப்பிடப்பட்டுள்ளான் முன்னதின் பாட்டில், இராவணன், தன்னுடைய வான் ஊர்தியில் தூக்கிச் சென்ற போது, சீதை கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் பொறுக்கி எடுத்து, அணியும் முறை அறியாமையால், தலைகீழாக அணிந்து கொண்டன எனக்கூறப்பட்டுளது.

பெரிய வலிய தேர் உடையோனாகிய இராமன் மனைவி சீதையை, வலிய இராவணன் கவர்ந்து சென்றபோது, நிலத்தில் சிதறிக் கிடந்த சீதையின் சிறந்த அணிகலன்களைக், கண்ணுற்ற, செம்முகக் குரங்குப் பெருங்கூட்டம், அவ்வணிகளை அணிந்து கொண்டு பொலிவுற்றாற் போல."!