பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழர் வரலாறு


"கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலம்சேர் மதர் அணி கண்டகுரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு."
-புறம் : 378 : 18-21:

அகத்தில், கீழ்வரும் உவமை இடம் பெற்றுளது. "வெற்றி, மிகு வேற்படை உடைய பாண்டியர்க்கு உரிய, மிகப்பழைய கோடிக்கரை (தனுஷ்கோடி) யின்கண், ஓயாது முழங்கும் இயல்பு வாய்ந்த பெருங்கடலின் அலை ஒலிக்கும் துறைக்கண் உள்ள, பல் விழுதுகளைக் கொண்ட பெரிய ஆலமரத்துப் பறவைகளின் ஆரவாரப் பேரொலி, வெல்லும் போர் வல்ல இராமன், அரிய நான்மறையின் பொருளை ஆய்வதற்கு வேண்டும் அமைதிக்காக, அடங்கியது போல."

"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பெளவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம் போல."
-அகம் : 70 13-16:

[சீதையின் அணிகலன்களைக், குரங்குகள், அணியும்முறை தெரியாமல் அணிந்து கொண்ட கதையைப் போலவே, ஆலமரத்தில் வாழும் பறவைகள் ஒலி அடங்கிய கதையும், சமஸ்கிருத இலக்கியங்களுக்குத் தெரியாதனவாம். பாண்டியர் கெளரியை, அதாவது மீனாட்சியை வழிபட்டதனால், அவர்கள் கெளரியர் என அழைக்கப்பட்டனர் போலும்.]

சுவர்க்கம்

ஆரியப் பழங்கதைகளிலிருந்து, தமிழகத்தில் இறுதியாக, இடங்கொள்ளத் தொடங்கிவிட்ட ஆரிய நம்பிக்கைகள் பக்கம் திரும்பு வோமாக. ஆரியத் தேவர்களின் உலகம் ஒருசில பகுதிகளில் காணப்படுகின்றன. "பொம்பூக்கள் மலரும்