பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தமிழர் வரலாறு


விடாது ஓம்பும் அந்தணர்களால் நிறைந்தது எனக், குறுநிலத் தலைவன் காரியின் நாடும் சிறப்பிக்கப்பட்டுளது :

"நின் நாடே,

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே."

பிற்காலப் புறநாறுாற்றுப் பாட்டு ஒன்றில், வேள்வித் தீ. அழகிய ஓர் உவமையாக ஆளப்பட்டிருப்பதை, நான் கண்ணுற்றேன். வேந்தனின் வெண்கொற்றக்குடை, அந்தணர் ஓம்பும், முத்திப்போல, ஒளிபெற்றுக் காட்சி அளித்தது என்பது அது :

"இரு பிறப்பாளர்,
முத்தீப்புரைய, காண்தக இருந்த

கொற்ற வெண்குடை."
- புறம் : 367 : 12-14;

கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழரசர்கள், இவ்வாறு. வேதவேள்விகளைப்போற்றிப் புரந்து வந்தாலும், தமிழ் அரசர்களால், வேதவேள்விகள். புரக்கப்படுவதைச், சிறப்பித்துக்கூறும் - அப்பாக்களிலேயே, அஎவரசர்களின் கொடிய போர்க்கள நிகழ்ச்சிகள், பாணர், பொருநர், விறலியர்க்குக் கறிசோறும், கள்ளும் கொடுத்துப் புரப்பது ஆகியனவும் சிறப்பிக்கப் பட்டுள்ளன. பல யாகசாலைகளுக்கு உரியோனாகிய பாண்டியன், (பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவமுதி) பகைவர் நாட்டுத் தெருக்களைக் கழுதைகள் பூட்டிய ஏர் கொண்டு உழுது பாழ் செய்தான்.

"வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி

பாழ் செய்தனை."
- புறம் : 15 : 2-3.

கரிகாலனின், வேள்வியை விளக்கிக் கூறும் அதே பாட்டு, அவன், போரில், பலகோட்டைகளை அழித்தான் தன் ஆயத்தாரோடு இருந்து பலகுடங் கள்ளைக் குடித்துக் களித் தான் என்றும் கூறுகிறது. -