பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தமிழர் வரலாறு


அறுத்து வளை பண்ணும் தொழில் மேற் கொண்டிருப்பர் என்று கூறுகிறர்.]

தமிழிலக்கியங்களில், ஆகம நெறி வழிபாட்டு முறைகள் இடங்கொண்டு விட்டதிலிருந்து, எங்கும் இயல்பாகக் காணப்படும், சமயம் சாராத் தொழில் மேற்கொண்டு விட்ட, சமய ஒழுக்கம் கெட்ட பிராமணர்கள் குறித்த முதல் குறிப்பு இதுவே ஆம்.

இதற்குமாறாக, வேத வேள்விகளைப் போற்றும் பிராமணர்கள், மிக உயர்வாகப் புகழப்பட்டனர். அத்தகு பிராமணன் ஒருவன் குறித்த புகழ் உரை இது: "நீண்ட சடை உடையோனாகிய, முதுபெரும் இறைவனாம் சிவனின், முற்றவும் ஆராயப்பட்ட வாக்கு நெறியை விட்டு, என்றும் பிறழாது, அறம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, நான்கு கூறுகளையுடையதாய், ஆமங்கங்களாலும் உணரப் பட்ட பழம் பெரும் ஒப்பற்ற நூலாம் வேதத்தோடு மாறுபடும். நூல்களை மட்டுமே கண்டவராகிய, புத்தர் முதலாம் புறச்சமயத்தவரது செல்வாக்கை அழிப்பான் வேண்டி, அவர்தம், மெய்போலத் தோன்றும் பொய்க் கருத்துக்களை, மெய்ப் பொருள் எனக்கொண்டு மயங்காமையோடு, அவ்வுண்மைப்பொருளை, அவர்களுக்கு ஏற்குமாறு சொல்லி, இருபத்தொரு வேள்வித் துறைகளையும் முட்டறச் செய்து முடித்த, புகழ்வாய்ந்த சிறந்த அறிவுடை ஆன்றோர் வழி வந்தவனே."

"நன்று ஆய்ந்த, நீள் நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்று புரிந்து ஈர்இரண்டின்
 ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்,
இகல் கண்டோர், மிகல் சார்மார்,
மெய்யன்ன பொய் உணர்ந்து,

பொய் ஒராது, மெய் கொளீஇ