பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தமிழர் வரலாறு


கிறது என்றாலும், அது, தமிழ் அரசர்களின், வேதவேள்விக் கடமைகளை வகுக்கவில்லை என்ற உண்மையிலிருந்து காணக்கூடும்.

[தொல்காப்பியப் பொருளதிகாரம் 6 ஆம் எண் சூத்திரத்தில், ஆசிரியர். தமிழ் அரசர்களின் போர்: கடமைகளை மட்டுமே பேசுகிறார்.] தொல்காப்பியம், தம் காலத்தில் வழக்கில் இருந்த செய்யுட்களை ஆதாரமாகக் கொண்டே இயற்றப்பட்டது: அக்கால அரசர்கள், ஆரியப் பழக்க வழக்கங்கள் பால் அன்பு காட்டும் நிலையை இன்னமும் மேற்கொள்ளவில்லையாகவே, அப்பாக்கள், வேதவேள்விகள் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதே அதற்குக் காரணமாம். பழக்க வழக்கங்கள் தமிழர் வாழ்வில் இடம் பெற நிச்சயமாகச் சில காலத்தை எடுத்துக் கொண்டிருக்கும்.

உடலெரியூட்டல்

வேத வேள்வித்தீ வழிபாட்டின் விளைவாக, வட இந்தியாவில் முகிழ்த்துவிட்ட வழக்கங்களுள் ஒன்று. இறந்தார் உடல்களை எரித்தல். இச்சமயக் கோட்பாட்டு முறையின் அடிப்படைத் தத்துவம். கடவுள்களில் ஒருவருக்கோ, பலருக்கோ படைக்கும் படையல்கள் அனைத்தும், அக் கடவுள்களின் வாய் ("முக்ஹ"-Mukha) அக்னி ஆதலின், புதிதாக எழுப்பும் வேள்வித் தீயில் இடப்படல் வேண்டும் என்பதாம். அப் படையல்கள், அப் படையல்களுக்காக என்றே கொண்டுவந்து கொல்லப்படும் விலங்குகளிலிருந்து பெறப்படும் "மெத்ஹ" (Medha) என அழைக்கப்படுவதாம். "மெத்ஹ"க்களில் பெரிய "மெத்ஹ", வேள்விக் குதிரையிலும் பெரிய "மெத்ஹ" , மனிதன். ஆகவே, வேள்வித்தீ மூலம், பலியிடப்பட்ட ஏனைய உயிர்கள் எல்லாம், கடவுள்களுக்குப் படைக்கப்பட்டு புனிதத் தன்மை பெற்றுவிடுவது போலவே, இறந்த மனிதனும், கடவுள்களுக்கான பொருந்தும் படையலாகக் கருதப்பட்டு, புனிதத் தன்மையுடையனாக்கப்படுகிறான். இக்கணக்கின் அடிப்படையில், அங்கெல்லாம் தீ வழிபாட்டு நெறி பரவிற்றோ, அங்கெல்லாம் இறந்தார்