பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழர் வரலாறு


"மரப் பொந்து ஆகிய தான் வாழும் இடத்தில் இருந்தவாறே, பிளந்து வைத்தாற் போலும் வாய் அலகு வாய்ந்த பேராந்தை, சுட்டுக்குவி, சுட்டுக்குவி எனச் செத்தாரை அழைப்பது போலக் கூவும், கள்ளிச் செடி வளர்ந்த பாழிடமாம் புறங்காட்டில் ஒரு பால் கிடந்து, ஒள்ளியதீச் சுட உடல் அழிந்துவிட்டது."

"பொத்த அறையுட் போழ்வாய்க் கூகை,
சுட்டுக்குவி எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி

ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது"
- புறம் : 241 : 1-10.


"கள்ளிச் செடி வளர்ந்த புறங்காட்டில், வெற்றிடையில் மூட்டப்பட்ட தீயைக் காக்கும் சிறிய விறகுகளால் ஆன படுக்கையின்கண் ஒள்ளிய அழலாகிய பாயலில் சேர்த்து"

"கள்ளிய போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈம்த்து

ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி"
-புறம் : 245 : 3-5.


"பரந்த புறங்காட்டில் உண்டாக்கப்பட்ட, கரிய பெரிய மரக் கட்டைகளால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை."

"பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு சமம்”.
-புறம் : 266 : 11


"பிணம் சுடும் புறங்காட்டின் அதிபதியாகப் போயினர்."

"சுடு பினக்

காடுபதியாகப் போகி."
-புறம் : 368 : 4.5

f