பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

219


வாயாக எனப் புலையன் ஆணையிடப், புல்மேல் அமர்ந்து உண்டு அழில் வாய் புகுந்த."

"வெள்ளில் நிறுத்த பின்றைக், கள்ளொடு
புல் அகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு

அழல்வாய்ப் புக்க"
-புறம் : 380 : 17-30.

பிறிதொடுபாட்டில், இறந்தானின் மனைவி, முறம் அளவான சிறிய இடத்தைத் துப்புரவாக்கி அழுகை ஓயாக் கண்ணளாய்த் தன் கண்சொரியும் நீரில், ஆவின் சாணத்தைக் கரைத்து மெழுகுவது குறிப்பிடப்பட்டுளது.

"சுளகின் சீறிடம் நீக்கி
அமுதல் ஆனாக் கண்ணள்

மெழுகும் ஆப்பி கண்கலும் நீரானே."
- புறம் : 249 12-148

மற்றொரு பாட்டில் இவ்வாறு கூறப்பட்டுளது : கள்ளிச் செடிகள் பரந்து, முட்செடிகள் முடிக்கிடக்கும் புறங்காட்டில், விளாமரம் நிற்கும் அகன்ற இடத்தில், உப்பிடாது ஆக்கிய சோற்றைக் கையில் கொண்டு, பின்புறம் பாராதே வந்து புலையன் கொடுக்க, நிலத்தை உண்கலனாகக் கொண்டு விரும்பாத பலியுணவை உண்ணும்."

"கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது
இழி பிறப்பினோன் ஈயப்பெற்று

நிலம் கலன்ாக விலங்கு பலி உண்ணும்"
-புறம்: 368