பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் புறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

223


என்பதாம். ஞாயிறு வழி ஆண்டுகளையும், திங்கள் வழி ஆண்டுகளையும், தொடர்பு படுத்திக் காணவும். ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஒவ்வொரு யுகத் தோடும், திங்கள் வழி மாதங்கள் இரண்டை மேலும் கூட்டிப் பஞ்சாங்கத்தைத் திருத்திக் கொள்ளவும் அவர்கள் கற்றிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுதல் லேண்டும். ஆனால், வேதங்களிலோ, அவற்றிற்குத் துணையான வேத இலக்கியங்களிலோ, வான்கோள் அடிப்படையிலான, சோதிடம் மற்றிய சிறு குறிப்பு தானும் அறவே காணப்படவில்லை; வானத்தில், விண்மீன்களின் நிலைமாறா, சீரான ஒட்டத்திற்கு மாறாக. கோள்களின் அவற்றிற்கே தனித்தன்மை வாய்ந்த, ஒழுங்கற்ற ஒட்டம் பற்றிய சிறு கருத்துதானும் அவற்றில் இடம் பெறவில்லை. இந்துக்களைச் சார்ந்த கிரேக்கர்களாம், யவனர்கள், காந்தாரத்திலும், சிந்துவெளிப் பள்ளத்தாக்கிலும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்ட பின்னர், இந்திய வானியல் நூல், கிரேக்கர்களின், வானியல் விஞ்ஞானம், மற்றும் சோதிட இயல் விஞ்ஞானப் போலிகளின் கலவையால் ஆட்கொள்ளப்பட்டது. ஞாயிறும், திங்களும், மனித வாழ்வின் போக்கை ஆட்சி செய்யும் குறிப்பிட்ட நாட்கள், நாழிகைகளின் ஆட்சியினவாகும் கோள்களின் கடவுளாம் நிலக்குத் தாழ்த்தப் பட்டு விட்டனர். ஞாயிறு, திங்கள்களோடு, வியாழனும், வெள்ளியும், செவ்வாயும், மிகமிக எளிதில் காணலாம் புதனும், சனியும் இணைக்கப்பட்டன. சோதிடஇயல் ஏழு கோள்கள், அவை ஆட்சி செலுத்தும் வாரத்தின் ஏழு நாட்கள் என்ற கொள்கை முடிவும் நிலை பெற்று விட்டது. கூறிய, இக்கோள்களின் பாதை, மனிதனின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறும், காரணம் குறித்து, பனிரெண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இக்கருத்துக்கள், கிரேக்கத்திலிருந்து, இந்தியாவுக்குக், கி.மு. 200க்கும், கி. பி. 400க்கும் இடையில், வடித்து வழங்கப்பட்டன. நனி மிகப் பழைய இந்திய வானியற்கலையும், யவனர்களின் சோதிடக்கலையும் பிரிவுஅறக்கலந்து, முழுக்க முழுக்க, அறிவியற்சார்புடையதான வேதாங்க சோதிடத்தின் வேறு-