பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் புறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

225


பட்டுள்ளது.-திங்கள், சகடம் மண்டிய துகள் தீர் கூட்டம்" (136).] ஆடு என்பது தானும், கிரேக்க "அனரஸ்" என்பதன் மொழி பெயர்ப்பாகிய மேஷ என்பதன் மொழி பெயர்ப்பே. பழந்தமிழ் மரபுகளை இவ்வாறு விடாது பற்றி நிற்கிறது என்றலும், அப்பாட்டு, செய்யுள்நடை கருதி, பிராகிருத மொழியிலிருந்து கடன் பெற்ற, கிழக்கு எனப் பொருள்படும் பாசி, மேற்கு எனப்பொருள்படும் ஊசி எனும் சொற்களை மேற்கொள்ளுமளவு காலத்தால் பிற்பட்டதாகும். பங்குனி என்ற சொல் அப்படியே கடனாகப் பெறப்பட்டுளது. மொழிபெயர்க்கப் படவில்லை. இச்செய்யுளில் புலவர், வானில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து விண்வீழ் கொள்ளி ஒன்று வீழ்ந்ததைத் தாம் பார்த்ததாகவும், அது, கோச் சேரமான் யானைக்கண் சேய் இரும்பொறைக்குவர இருக்கும் இறப்பைக் குறிப்பால் உணர்த்துவதாகத் தாம் கருதியதாகவும் கூறுவதால், அவன் மிகப்பிற்பட்ட காலத்துக் காவலன் ஆகிறான்.

"ஆடியல் அழல்குட்டத்து
ஆரிருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாகக்
கடைக்குளத்துக் கயங்காயப்,
பங்குனி உயர்அழுவத்துத்
தலை நாண்மீன் நிலைதிரிய
நிலைநாண்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல் நாண்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசிமுன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்
கனைஎரிபரப்பக் கால் எதிர்பு பொங்கி
ஒருமீன் வீழ்ந்தன்றால், விசும்பி னானே;
அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி தன்னாட்டுப் பொருநன்

த.க. II-16