பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

233

"கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்,
பொருது புண்நாணிய சேரலாதன்,
அழிகள மருங்கின் வாள் வடக்கு இருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்

அரும் பெறல் உலகம் அவளொடு செலீஇயர்".
-அகம் : 55 : 10 - 14.

இப்பாட்டு, பிற்காலப்புலவராகிய மாமூலனாரால் பாடப்பெற்றது : ஆகவே, அது, வீர சுவர்க்கம் அடைய வடக்கிருந்து உயிர்துறக்கும், ஓர்ஆரியக் கோட்பாட்டைப் பேசுவதன் பொருத்தத்தை விளக்குகிறது. இப்பாட்டு, அவ்வரசனைச், சேரலாதன் என்கிறது ; புறம் 65ன் கொளு, "பெரும்" என்ற அடையினை, முன்னே கொடுத்துப் பிற சேரலாதன்களினின்றும் வேறுபடுத்துகிறது. மற்றொரு பாடம், அவனைப் "பெருந்தோள் ஆதன்" "பெரிய தோள்களையுடைய ஆதன்" ஆக்குகிறது:

பெருஞ்சோற்று உதியன் :

வரலாற்றுச் செய்திகள் சில, நமக்குத் தெரியவிருக்கும் முதல் சேரப்பேரரசன், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆவன். இவன் பெயருக்கு முன்னால் கொடுக்கப்பட்டிருக்கும், பெருஞ்சோறு என்ற அடைமொழி அவன் சமகாலப்புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், அவனைப் புகழ்ந்து பாடிய ஒரு புறப்பாட்டு, முழுமையாக எடுத்துக் கூறப்பட்டு, வரிக்கு வரி ஆராய்ந்து நோக்க வேண்டுமளவு, பண்டைக்காலத்திலிருந்தே, பெரிதும், தவறாகப் பொருள் கொளளப்பட்டு வந்துளது : பொருளற்ற கற்பனைக் கதைகள் எழச்செய்துவிட்டது. அது இவ்வாறு கூறுகிறது ! "அணுத்திரள்களால் செறிந்த நிலமும், அந்நிலத்தை அடிப்படையாகக் கொண்டு ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தழுவி வரும் காற்றும், அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீரும் எனக்கூறப்பட்ட ஐம்பெரும் பூதங்களின்