பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

237


சிலப்பதிகாரக் காப்பியத்தையே பெரிதும் துணைகொண்டு உள்ளார். அப்பாட்டில், "உதியஞ்சேரல், ஐ வ ர் க் கும், நூற்றுவர்க்கும் இடையில் நடைபெற்ற போரில், பெரிய அளவிலான சோற்றை வரையாது வழங்கிய சேரன், பொறையன்," என அழைக்கப்பட்டுள்ளான் :

"ஓர் ஐவர், ஈர்ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தான்அளித்த

சேரன், பொறையன், மலையன்"
-சிலம்பு : 29 ஊசல்வரி 2:

உதியன் இருதிறப் படையினர்க்கும் உணவளித்தான் எனக் கூறுவதன் மூலம், இந்தியாவின் தென் கோடி முனையைச் சேர்ந்த ஓர் அரசன், கோதுமை உணவுண்ணும், துரியோதனன், யுதிஷ்டிரர் படைவீரர்களுக்கு உணவு படைக்க, அரிசியையும், அறுசுவையூட்டும் உணவுப் பொருட்களையும் குருக்ஷேத்திரத்திற்குச் சுமந்து சென்றான் எனக் கூறுவதில் உள்ள பொருத்தமின்மையை உணராமலே, உரையாசிரியர், அம் மூலவரிகளில் குறிப்பாக உணர நின்ற ஒன்றை, வேறு வகையில் விரித்துணர வைத்துள்ளார்.

[இந்தியாவின் தென் கோடி முனையைச் சேர்ந்த ஓர் அரசன், அரிசி முதலாம் உணவுப் பொருட்களைக், குருக்ஷேத்திரத்திற்குச் சுமந்து சென்றான் என்பது பொருத்தமில்லா கூற்று என்ற இந்நூலாசிரியர் கருத்து பற்றி, மொழிபெயர்ப்பு ஆசிரியரின் விளக்கத்தைச் "செங்குட்டுவன் வடநாட்டு படையெடுப்பு உண்மை நிகழ்ச்சி அன்று ! வெறும் கட்டு கதை" என்பது சரிதானா? என்ற தலைப்புள்ள கட்டுரையில் கண்டுகொள்க.]

நான் கூறியதுபோல், மக்களுக்கு உணவு படைப்பதன் மூலம், உதியன், கெளரவர்கள் இறந்த நாளைக் கொண்டடினான் என்பதே, அவ்வரிகளில் பொருந்தும் பொருளாம் இக்கொண்டாட்டம், பெரும்பாலும், சிரார்த்தம் என்பதன்