பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

239


தேவை இல்லை. ஒரு பாட்டு, கோட்டம்பலத்துத்துஞ்சிய சேரமான் என்ற சேரர்குலச் சிற்றரசன் பாடிய, நல்ல ஆனிரைச் செல்வங்கள் மலிந்த குழுமூர் என்னும் ஊரில், வருவார்க்கு வழங்குதலாம் கொடையாகிய கடமையினை ஏற்றுக் கொண்டவனும், நடுநிலை பிறழா நெஞ்சுடையவனுமாகிய உதியன் என்பானின் அட்டிற்சாலையில் எழும் ஆரவாரப் பேரொலியை உவமையாகக் கொண்டுளது :

"நல்லான் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடைக்கடன் என்ற, கோடா நெஞ்சின்

உதியன் அட்டில் போல"
-அகம் , 168 : 5-7;

இப்பாட்டு, புகழ்பெற்ற அப்பெருவிருந்து நடைபெற்ற இடமாக, பெரும்பாலும், அதே பெயரில் கோவை மாவட்டத்தில் உள்ன குழுமூரைக் குறிப்பிடுகிறதேயல்லது: குருக்ஷேத்திரத்தை அன்று. மற்றொரு பாட்டு, "இறந்து துறக்கலோகம் அடைந்த இறவா நம்புகழ் வாய்ந்த முன்னோர்கட்குத் தென்புலக் கடன் ஆற்றுவான் வேண்டி உதியன் சேரலாதன் பெருஞ்சோறு படைத்தபோது, கரிய பெரிய பேய்க் கூட்டம் கூடியிருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது:

"துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்,
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல்

கூளிச்சுற்றம் குழீஇ இருந்தாங்கு".
-அகம் : 233 : 7 - 10

இப்பாட்டு அப்பெருஞ்சோறு வழங்கல் போர் நிகழ்ந்த போது நடைபெறவில்லை. அதற்கு மாறாக, அதற்கு மிக மிகப் பிற்பட்டகாலத்தே அப்போர் நினைவாக மேற்கொள்ளப்பட்ட விழாவின் போதே நடைபெற்றது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. அவ்விழா குழுமூர் என்னும்