பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

15

முழுவதும் கெட்டொழியவும், இருங்கோவேளின் பெருஞ்சுற்றம் பாழ்பட்டுப் போகவும், சினம் மிகுதலால் சிவந்துவிட்ட கண்களால் வெகுண்டு நோக்கினான்.


--பட்டினப்பாலை: 274-282

இப்பட்டியலில் கூறப்பட்டவருள், இருங்கோவேள், என்ற குறுநிலத்தலைவன், புதுக்கோட்டை மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி, மதுரை நெடுஞ்சாலைக்கண் உள்ள பழைய நகராம் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டிற்குத் தெற்கில் உள்ள மாவட்டங்களை ஆண்டிருந்தான். அருவா நாட்டுக் குறுநிலத் தலைவனும், ஒளியர் குலத்தலைவனும், சோழ, பல்லவ நாடுகளுக்கு இடைப்பட்ட மாவட்டங்களை ஆண்டுவந்தனர். இவ்விரு நாடுகளையும் வெற்றி கொண்டுவிடவே, கரிகாலன், வடவர்களை, அதாவது, காஞ்சி ராஜாக்களாம் பல்லவர்களைப் பணி கொண்டான். அவன், மேலும் படையெடுத்துச் சென்று, கடப்பை, கர்னூல் மாவட்டங்களை ஆண்டுகொண்டிருந்த பொதுவர் குலத் தலைவர்களைத், தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். பொதுவர் என்ற சொல், ஆயர் தலைவர் எனும் பொருள் உடைத்து. ஆகவே, அது பல்லவ நாட்டின் மருத நிலப்பகுதிக்கு வடக்கில் உள்ள முல்லை நாட்டுப் பழங்குடியினர் தலைவர்களைக் குறிப்பதாகும். கரிகாலன் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவரப்பட்ட அவ்வாயர்களின் அம்மாவட்டங்களில், இன்றும் வாழ்ந்து, அப்பகுதியில் புகழ்