பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தமிழர் வரலாறு

இடத்தின் நாடகமுடிவில் நடிகர்களும், நாடகம் காண வந்தவர்களும் பெருஞ்சோறு படைக்கப்பட்ட நாடக விழாவாக அல்லது வேறு எதுவாக இருக்க இயலும் ?

இப்பாட்டு பழைய தொகை நூல்களில் இடம்பெற்ற பாக்கள் சிலவற்றைப் பாடிய, காலத்தால் பிற்பட்ட புலவர்களுள் ஒருவராய மாமூலனாரால் பாடப்பெற்றுளது. ஆகவே, உதியஞ்சேரலாதனின் காலம், நனிமிகப்பழைய காலத்தது ஆதல் இயலாது.

[இக்கருத்து ஏற்புடைய தன்று என்பது> மொழிபெயர்ப்பு ஆசிரியரின் "மாமூலனார் காலம்" என்ற திறனாய்வில் விளக்கப்பட்டுளது.]

இந்த உதியஞ்சேரல், பெருவீரனாகக் காணப்படுகிறான். நற்றிணை "உதியஞ்சேரலாதன்", கடுஞ்சினம் மிக்குப் புகுந்த, ஒலி அடங்கா அகன்ற போர்க்களத்தில் களம்பாடு ஓர் பாட்டிற்கு ஏற்ப, கருவிஇசை எழுப்புவார். ஆம்பல் என்னும் பண் எழ விரைவாக ஊதுகின்ற புல்லாங்குழல், இனிய இசை எழுப்பினாற் போல" என்ற Xர் உவமையினைக் கொண்டுளது :

"உதியன் மண்டிய ஒளிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்

ஆம்பலங் குழலின்"
-நற் : 1.13 : 9 - 11.

அகநானூறு, "பிறர் நாடுகளை வென்று, தன் நாட்டின் எல்லையை விரிவாக்கிக்கொண்ட உதியஞ்சேரலாதனைப் பாடிச் சென்ற பரிசிலர், பெரும் பொருள் பெற்று மகிழ்வது போல" என்ற உண்மையினைக் கொண்டுளது.

"நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்

பாடிச் சென்ற பரிசிலர் போல"
- அகம் : 65 ; 5-6