பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தமிழர் வரலாறு


ஒவ்வொன்றும் வேறுவேறுபட்ட நீளம் உடையவாய, பொதுவாக, சராசரி இருபது அடிகளைக்கொண்ட பத்துப்பத்து பாடற்றொகுதிகளாகப் பத்துத் தொகுதிகளைக் கொண்ட தொகைநூல் பதிற்றுப்பத்து. தனிப்பாடல்களாக அல்லாமல், ஒவ்வொரு தொகுப்பும், குறிப்பிட்ட ஒரு பேரரசன் அல்லது ஒரு குறுநிலத்தலைவன் பற்றி விரிவாகப் பாராட்டும், வரையறுக்கப்பட்ட காரணம் குறித்துப் பாடப்பட்ட பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட பத்து தொகுப்புக்களைக் கொண்ட முதல் தொகை நூல் இது. இவற்றுள் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பத்தும், ஒரு சேரவேந்தன் அல்லது, சேரர்குலத் தலைவனைப் பற்றியது. ஒவ்வொரு பத்தும், பாக்கள் மட்டுமே இடம்பெற்ற, கையெழுத்துப் படிகளில் அல்லாமல், பாடல்களோடு, அவற்றிற்கான உரைகளும் இடங்கொண்ட கையெழுத்துப் படிகளில் மட்டுமே. இடம் பெறும் பதிகங்களைக் கொண்டுளது. அப்பதிகங்கள். அப்பாடல்களின் பாட்டுடைத் தலைவர்கள் பற்றிய, மூலங்களில் காணப்படாத வரலாறு அல்லது கற்பனைக் கருத்துக்களைக் கொடுத்து உதவுகின்றன: வழக்கம் போலவே இன்றைய எழுத்தாளர்கள், பதிகங்களையும், பாக்களையும் ஒன்றாகவே கொண்டு மயங்கி, அவை அனைத்துமே பதிற்றுப்பத்துத் தான் எனக்கூறுவதோடு, அகச் சான்றாக எடுத்து ஆளக்கூடிய தகுதியை, மூலம், பதிகம், உரை ஆகிய மூன்றிற்குமே ஒரு படித்தாக வழங்குகின்றனர்,

பதிற்றுப்பத்து ஆசிரியர்களெல்லாம், கி. பி. ஐந்து, ஆறாம் நூற்றுண்டுகளைச் சேர்ந்த பிராமணர்கள். ஆகவே தான் அப்பாக்கள், ஆரியக்கருத்துக்கள், ஆகமப் பழக்கவழக்கங்களால் பொங்கி வழிகின்றன. ஆகவே, அவை