பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

243


தமிழ் நாட்டில் ஆகமநெறிக் கோயில்வழிபாடுகள் பரவியதற்குப் பின்னர்ப் பாடப்பட்டனவாதல் வேண்டும் அவ்வகையில், இரண்டாம்பத்தின் நான்காம் பாடலின் தொடக்க வரிகள், அப்பாட்டுடைத் தலைவன், "நிலம், நீர், காற்று, விசும்பு என்ற இந்நான்கினையும் போல் அளந்து காண மாட்டாப் பெருமையும், நாண்மீன்களும், கோள்களும், திங்களும், ஞாயிறும், ஊழிப்பெருந்தீயும் ஒருங்கு கூடி நின்ற வழிப் பிறக்கும் பேரொளி போலும், புகழ்ப்பேரொளியும் உடையவனாகப் புகழப்பட்டுள்ளான். இப்பகுதியில், கிரேக்க வானியல்கலையிலிருந்து பெறப்பட்ட கருத்தான நாண்மீன்களுக்கும், கோள்களுக்குமிடையிலான வேறுபாடு மட்டுமல்லாமல், வானிடை நாண்மீன்களும், கோள்களும் ஒருயுகத் தொடக்கத்தில் ஓரிடத்தே ஒன்றுகூடும் என்ற இந்திய, பிற்காலக் கோட்பாடு பற்றிய குறிப்பும் இடம் பெற்றுளது.

"நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே ;
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்

ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை"
-பதிற்று : 14: 1 - 4

21 ஆம் பாட்டின் முதல் இருவரிகள் அரசர்களின் நல்லாட்சிக்கு, ஐம்பெரும் துணைகளாக, சொல்இலக்கணம் பொருள் இலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய ஐந்திணைக் குறிக்கின்றன.

"சொல், பெயர், நாட்டப், கேள்வி

நெஞ்சம் என்று ஐந்து"
-பதிற்று: 21 : 1-2