பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

245


கடவுள் மேன" (பதிற்று : 13 : 20) ஆம். இக்கோயில்களில் ஆகம நெறி வழிபாடே பின்பற்றப் பட்டது : பின்வரும் பாடற்பகுதியைக் காண்க : "உயர்ந்த மிகத் தெளிந்த ஒலி எழுப்பவல்ல மணியை இயக்குவார், அம்மணியிடையே கல் எனும் ஓசை எழுமாறு இயக்க, உண்ணா நோன்பு மேற்கொண்டிருக்கும் விரதியர், குளிர்ந்த நீர்த்துறைக்குச் சென்று நீராடித், திருமகள் வீற்றிருக்கும் மார்பில் அணிந்துள்ள, வண்டுகள் வந்து மொய்க்குமளவு புதுமை பொலியும் மாலையாம், மணம் கமழும் கொத்துக்களால் தொடுக்கப் பெற்ற துளசி மாலையும், காண்பவர் கண்களைக் கூசப் பண்ணும் பேரொளி வீசும் ஆழிப்படையும், உடைய, செல்வப் பெருமகனாம் திருமாலின், சிறந்த திருவடிகளில் வணங்கி வாழ்த்தி, நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி உடையராய்த், தாம் தாம் இனிது வாழும் தத்தம் ஊர்களுக்குத் திரும்பச்செல்ல."

"தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்என,
உண்ணாப் பைஞ்ஞலப் பனித்துறை மண்ணி,
வண்டுது பொலிதார்த் திருளுெமர் அகலத்துக்
கண்பொரு திகரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி,

நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர"
-பதிற்று : 31 : 5 - 10.

என்றாலும், பழந்தமிழ்ப் பழக்க வழக்கங்கள், ஆரியப் புதுவரவுகளால், இன்னமும், வெளியேற்றப் பட்டுவிடவில்லை. காரணம், போர்க் களங்களில் அரசர்களால் ஆடப் பெறும் துணங்கை ஆட்டம் பற்றிய நான்கு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன : அவற்றுள் பின் வருவது ஓர் எடுத்துக்காட்டு : "பிணங்கள் குவிந்து கிடக்கும் கொடிய போர்க்களத்தின் இடையே நின்று, பகைவர் நாடுகளைக் கைக்கொண்டு கைக்கொண்டு, வலிமை பெற்ற திண் எனத்திரண்ட தோள்களை உயரத்தாக்கி வீசித் துணங்கைக் கூத்து ஆடு."