பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

17


காடுகளை அகற்றிப் '‘பொத்தப்பி’' என்ற ஒரு சிற்றுாரை நிறுவினான். அதைச் சூழ, எண்ணற்ற சிற்றூர்கள் தோன்ற ஊக்கம் ஊட்டினான். அச்சிற்றுார்களில், பொத்தப்பி, மிகவும் முக்கியமானதாக இருந்தமையால், அதைச் சூழ, உள்ள சிற்றுார்கள், “பொத்தப்பி நாடு’ என்ற பெயரைப் பெற்றன. (திரு. என். வெங்கட்ரமணய்யா அவர்கள், சென்னைக் கிறித்துவக் கல்லூரி மலர், 1929 சனவரி வெளியீட்டில் எடுத்தாண்டிருக்கும் L. R. Vol. 22. பக்கம் : 141ன் எடுத்தாட்சி) ஆவணத்திலிருந்து மேலே எடுத்துக் காட்டப்பட்ட பகுதியில் உள்ளடங்கியிருக்கும் அக்காதுவழிச் செய்தி, கரிகாலன், காடுகளை அழித்து, அவற்றை வாழிடங்களாக மாற்றினான் என்ற புலவர் கூற்றிற்குச் சரியான விளக்கமாம் என்பதில் ஐயம் இல்லை, ஆகவே, கரிகாலன் ஆட்சி. தமிழ்நாடு முழுவதிலும், தெலுங்கு நாட்டின் ஒரு, பகுதியிலும் பரவியிருந்தது; அவன், மக்களின் விவசாயத், தொழில்களை வளர்த்தான். வாணிகத்திற்கு ஊக்கம் ஊட்டினான். ஆகவே அவன் நாடு வளம் பெற்றிருந்தது என முடிவு கொள்ளலாம்,

புதிய தலைநகர்

முதலாவது உரிமை கொண்ட தன் நாடுகளைத் தன்னுடைய கப்பற்படையால், தன் பிடியின் கீழ்க் கொண்டிருக்கலாம். இரண்டாவது, கடல் வாணிகத்திற்கு அங்கிருத்தவாறே ஊக்கம் ஊட்டி, இவ்வகையால், தன் அரசு வருவாயைப் பெருக்கலாம், என்பதற்காகவே தன் தலைநகரை, உறையூரிலிருந்து, பழைய கடற்கரை நகராம்: காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றியதாகத் தெரிகிறது அந்நகரைச் சூழ, வெற்றித்திருமகள் வாழும் திண்ணிய மதில்களை எழுப்பி, அவற்றிற்குப் பெரிய மரக்கறிகளை இணைத்துப் புலிச்சின்னம் பொறித்துப் பண்ணப்பட்ட வாயிற்கதவுகளை அமைத்தான் என்கிறது பட்டின்ப்பாலை;

“புலிப்பொறிப் போர்க்கதவின்
திருத்துஞ்சும் திண் காப்பு‘’

த.வ. 11-2