பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

265


"கால் உளைக் கடும்பிசிர் உடைய, வால்உளைக்
கடும்பரிப் புரவி ஊர்ந்த நின்

படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே."
-பதிற்று 41 : 25-27.

பகைவரின் வில்லிலிருந்து தொடுக்க படும் அம்புகளின் கடுமையைக் கெடுத்த வலிய வெண்மையான தோலால் ஆன கேடகத்தையும், அவற்றிற்கேற்ற மறப் பண்பு படைத்த படையினையும் உடைய வேந்தர் உள்ளே, மேகம் படிந்து குடித்தலால் குறையாமலும், ஆறுகள் வந்து புகுவதால் மிகாமலும், எதிர்த்து வீசும் காற்று எழுப்பும் அலைகளால் அசைதலையுடைய, மிக நிறைந்த நீரை உடைய முழங்கும் அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலில், மணிபோலும் ஒளியினையுடைய வேற்படையை எறிந்து, அக்கடல் மீது வெற்றி கொண்டவர், நின் முன்னோருள்ளும் ஒருவரும் இல்லை: இப்பொழுதும் ஒருவரும் இல்லை."

"தெவ்வர்,
சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனி யார் உளரோ? நின் முன்னும் இல்லை;
மழைகொளக் குறையாது, புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்கிரும் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு

முழங்குதிரைப் பணிக் கடல் மறுத்தி சினோரே." -
பதிற்று 45 : 15-2

புலவர், அடுத்த பாட்டிலும், அப்பொருளுக்கே வந்: "சங்கு முழங்கும் கடல் கலங்குமாறு, வேற்படைை ஏவி, உடைந்து தலைமடங்கும் அலைகளைக் கொண்ட நீர் பரப்பாகிய ஒலிக்கும் கடலைத் தோற்று ஓடப் பண்ணி வுெல்லும் புகழ் வாய்ந்த குட்டுவ!" என அழைக்கிறார்.{{Nop}}